Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: target

மன்னார்குடி கும்பலிடம் வருமான வரித்துறை சோதனை ஏன்?; பூனைக்குட்டி வெளியே வந்தது!; நமது எம்ஜிஆர் நாளேடு அம்பலம்!!

மன்னார்குடி கும்பலிடம் வருமான வரித்துறை சோதனை ஏன்?; பூனைக்குட்டி வெளியே வந்தது!; நமது எம்ஜிஆர் நாளேடு அம்பலம்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சசிகலா, தினகரன் மற்றும் அவருடைய நெருங்கிய வட்டாரங்களைக் குறிவைத்து வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் (நவம்பர் 11, 2017) சோதனை நடத்தி வருகிறது. இதற்கு முன், எத்தனையோ முறை இதுபோன்ற சோதனைகளை மன்னார்குடி கும்பல் சந்தித்து இருந்தாலும், இப்போது போன்ற மெகா சோதனையை எதிர்கொண்டதில்லை. முதல் நாளில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இரண்டாவது நாளான நேற்று ஊடகங்களைச் சந்திப்பதை தவிர்த்தார். இதற்கிடையே, ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கிடைத்ததாகவும், பாஸ்கரன் வீட்டில் இருந்து 15 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவல்கள் எதுவுமே வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்களாகச் சொல்லப்படவில்லை. ஊடகங்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையிலும், யூகங்கள் அடிப்படையிலும் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு
கிரிக்கெட்: நியூஸிக்கு 281 ரன் இலக்கு; கோஹ்லி புதிய சாதனை!

கிரிக்கெட்: நியூஸிக்கு 281 ரன் இலக்கு; கோஹ்லி புதிய சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கனே வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒரு நாள் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (அக். 22, 2017) மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டை வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஜோடி பெரிய அளவில் சோபிக்கவில்லை. சிக்ஸர் அடித்து அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய ரோஹித் ஷர்மா, 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவானும் 9 ரன்களில் வெளியேறினார். இருவருமே நியூஸியின் டிரன்ட் போல்ட் வேகத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தினேஷ்கார்த்திக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவரும் ஒருகட்டத்தில் 37 ரன்களில் த
கிரிக்கெட்: இலங்கை மீண்டும் ‘வாஷ் – அவுட்’

கிரிக்கெட்: இலங்கை மீண்டும் ‘வாஷ் – அவுட்’

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் இலங்கை அணி 5 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோற்று வாஷ் - அவுட் ஆனது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுடன் 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரு டி-20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி, 3&0 கணக்கில் வென்று இருந்தது. நான்காவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில், கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று (செப். 3) நடந்தது. இந்தப் போட்டியிலாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணி வீரர்கள், கடந்த இரு நாட்களாக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். டாஸ் ஜெயித்த இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஹர்திக் பா