Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: T.M.selvaganapathi

சட்டப்பேரவை தேர்தல்: மாங்கனி மாவட்டத்தில் திமுக மண்ணை கவ்வியது ஏன்?

சட்டப்பேரவை தேர்தல்: மாங்கனி மாவட்டத்தில் திமுக மண்ணை கவ்வியது ஏன்?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, கோட்டையில் கொடி நாட்டினாலும், மாங்கனி மாவட்டமான சேலத்தில் மட்டும் தொடர்ச்சியாக மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக கோட்டை விட்டிருப்பது உடன்பிறப்புகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   அதேநேரம், சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி, மீண்டும் இந்த மண்ணை அதிமுகவின் கோட்டை என நிரூபித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உள்ளடி வேலைகள், கோஷ்டி பூசல்களால் திமுகவால் இங்கு ஒரு தொகுதிக்கு மேல் கைப்பற்ற முடியாத சோகம் தொடர்கிறது. கடந்த 2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் கைப்பற்றியது. 2016 தேர்தலில் அதிமுக தனித்து 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், சேலம் வடக்கில் மட்டும் சூரியன் உதித்து இருந்தது.
திமுக: 24 கிடா வெட்டி 3000 பேருக்கு பந்தி வைத்த டிஎம்எஸ்! மெகா விருந்தின் மர்மம் என்ன?

திமுக: 24 கிடா வெட்டி 3000 பேருக்கு பந்தி வைத்த டிஎம்எஸ்! மெகா விருந்தின் மர்மம் என்ன?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
என்றைக்கும் இல்லாத திருநாளாக டி.எம்.செல்வகணபதி வைத்த 'மெகா' கிடா விருந்துதான், சேலம் மாவட்ட திமுகவில் இப்போதைக்கு காரசார விவாதப்பொருளாகி இருக்கிறது.   கடந்த பிப்ரவரி 3, 2019ம் தேதி, திமுகவினர் அறிஞர் அண்ணாவின் ஐம்பதாவது ஆண்டு நினைவுதின ஊர்வலம், பேச்சரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்க, அக்கட்சியின் மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளரான டி.எம்.செல்வகணபதியோ, ஏற்காட்டில் ஒரு பெருவிருந்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். ஏற்காட்டிலிருந்து குப்பனூர் செல்லும் சாலையில் உள்ள சூரக்குடி முனியப்பன் கோயிலில் கிடா வெட்டி வழிபட்டார் டிஎம்எஸ். 'பிப்ரவரி 3ம் தேதியன்று, பெருவிருந்து காத்திருக்கிறது. எல்லோரும் ஏற்காடு ஏரி அருகே உள்ள திலகம் நெஸ்ட் ஹோட்டலுக்கு மதியம் 12 மணிக்கு வந்துவிடுமாறு' ஏற்காடு ஒன்றிய திமுகவினர், கட்சியினருக்கு வாட்ஸ்அப்களில் குறுஞ்செ