Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Syndicate member

ஊழல் கதவுகளை திறக்கும் பெரியார் பல்கலை.!; ஊழியர்கள் இடமாறுதலிலும் ஓரவஞ்சனை!! #PeriyarUniversity #Scam

ஊழல் கதவுகளை திறக்கும் பெரியார் பல்கலை.!; ஊழியர்கள் இடமாறுதலிலும் ஓரவஞ்சனை!! #PeriyarUniversity #Scam

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலையில் நேற்று நடந்த ஜம்போ இடமாறுதல் உத்தரவின் பின்னணியிலும் குறிப்பிட்ட சங்கத்தினரை ஒடுக்கும் நோக்கில் உத்தரவிடப்பட்டு உள்ளதோடு, முக்கிய கோப்புகள் மாயமான விவகாரத்தை அடியோடு முடக்கிப்போடும் உள்நோக்கம் இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. சேலம் பெரியார் பல்கலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அமைச்சுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 376 ஊழியர்கள் தொகுப்பூதியம் / தினக்கூலி அடிப்படையில் பணிபுரிகின்றனர். இவர்கள் தவிர 62 நிரந்தர பணியாளர்களும் உள்ளனர்.   நிர்வாகம் தொய்வடையாமல் இருக்க முதுகெலும்பு போன்றவர்கள்தான் இத்தகைய அமைச்சுப்பணியாளர்கள். ஆனால் அரசு விதிகள் அல்லது பல்கலை விதிகளின்படி ஓர் ஊழியர், ஒரே பிரிவில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடாது. நீண்ட காலமாக ஒருவர் ஒரே பிரிவில் பணியாற்றும்போது அங்கே முறைகேடுகள் அரங்கேற வாய
சேலம் பெரியார் பல்கலை; சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தில் விதிமீறல்!

சேலம் பெரியார் பல்கலை; சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தில் விதிமீறல்!

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
பணி நியமனத்தில் ஊழல், முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை என அடுத்தடுத்து திகில் கிளப்பும் சேலம் பெரியார் பல்கலை, விதிகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர் நியமித்ததன் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. பல்கலைக்கழகங்களை நிர்வாகிக்க துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் தன்னிச்சையாக யாதொரு நடவடிக்கையும் எடுத்து விட முடியாது. அவரின் ஒவ்வொரு செயல்பாடும் பல்கலையில் உள்ள சிண்டிகேட் குழுவின் தீர்மானங்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். அந்தளவுக்கு சிண்டிகேட் குழுவுதான், பல்கலைகளைப் பொருத்தவரை ஆகப்பெரிய அதிகார அமைப்பு. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புதல், தொலைதூர படிப்பு மையங்களுக்கு ஒப்புதல் அளித்தல், டெண்டர்களை முடிவு செய்தல், புதிய கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவு தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்தல், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் என சிண்டிகேட் குழு