Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: symbol

ஆர்கே நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ல் இடைத்தேர்தல்!

ஆர்கே நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ல் இடைத்தேர்தல்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று (நவம்பர் 24, 2017) அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் உள்ள ஆர்கே நகர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, ஆர்கே நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவில் உள்கட்சி பூசல்கள் உச்சத்தில் இருந்த நிலையில், அதிமுக எ...
“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி!

“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி!

அரசியல், இந்தியா, கோயம்பத்தூர், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய வருமானவரி சோதனையை இன்றைய (நவம்பர் 9, 2017) தினம் சந்தித்திருக்கிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டிடிவி தினகரன் உறவுகளை குறி வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த சோதனைதான் அனைத்து ஊடகங்களிலும் 'பிக் பிரேக்கிங்' சேதி. சசிகலாவின் நேரடி உறவுகளான நடராஜன், திவாகரன், மகாதேவன், சுந்தரவதனம், டிடிவி தினகரன், விவேக் ஜெயராமன், ஜெயானந்த், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மருத்துவர் வெங்கடேஷ், மருத்துவர் சிவக்குமார் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் பிரதான சோதனைக் களங்களாகின. இவற்றுடன் ஜெயா டிவி, டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை, கிருஷ்ணபிரியாவின் என்ஜிஓ அலுவலகங்களும் தப்பவில்லை. மன்னார்குடி கும்பலின் ஆதரவாளர்களான பெங்களூர் புகழேந்தி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினரும் வழக்கறிருமான நாமக்கல் செந்தில், கோவை மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் உதவி...
சசிகலாவுக்கு பரோல் கிடைக்காதது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

சசிகலாவுக்கு பரோல் கிடைக்காதது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சொத்து வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நாளுக்கு நாள் அவருடைய உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருபுறம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. நடராஜனை பார்ப்பதற்காக, 15 நாள்கள் பரோல் விடுப்பில் செல்ல அனுமதி கேட்டு சசிகலா சிறைத்துறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்து இருந்தார். இன்று (அக்டோபர் 3) பரோல் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பரோலில் செல்வதற்கான தகுதிகள் இல்லை என்றுகூறி சிறைத்துறை நிர்வாகம் அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. சில தொழில்நுட்ப காரணங்களால் ...
உள்ளாட்சி தேர்தலை நவ. 17க்குள் நடத்த ஹைகோர்ட் உத்தரவு

உள்ளாட்சி தேர்தலை நவ. 17க்குள் நடத்த ஹைகோர்ட் உத்தரவு

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, வரும் நவம்பர் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன்படி கடந்த 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி முடித்தது. அதைத்தொடர்ந்து கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி முடித்தது. இந்நிலையில், உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. அடுத்த தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கையும் வெளியிடப்பட்ட நிலையில், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என்று திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன்பின், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இட ஒதுக்கீடு பணிகள் முழுமையாக...