Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Suppressed

அடிமேல் அடி வாங்கும் ஆசிரியர்கள்!; ‘கக்கூஸ் போவதையும் கணக்கெடுக்கணுமாம்’

அடிமேல் அடி வாங்கும் ஆசிரியர்கள்!; ‘கக்கூஸ் போவதையும் கணக்கெடுக்கணுமாம்’

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சிறப்பு கட்டுரை-   கம்ப்யூட்டர், டேப்ளட், டிரைமெஸ்டர், தொடர் மதிப்பீட்டு முறை, ஆங்கில வழி என அரசு தொடக்கப்பள்ளிகள் ஒருபுறம் நவீனமாகி வந்தாலும், சமூகத்தைக் கட்டமைக்கும் ஆசிரியர்களை அரசாங்கம் கொத்தடிமைகளைப் போல நடத்தும் போக்கு, அவர்களை மனதளவில் சோர்வடையச் செய்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருமுறை ஊதிய உயர்வுக்காக போராடும்போதும் அவர்களை கேலி பேசும் பட்டியலில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். அந்த எண்ணத்தில் எனக்கு இப்போதும் பெரிய மாற்றுக்கருத்து இல்லை. உழைக்காமலேயே ஊதியம் பெறும் வர்க்கமாக ஆசிரியர்களை சித்தரித்திருப்பதில் அரசுக்கே பெரும் பங்கு உண்டு என்றுதான் சொல்வேன். கைநிறைய சம்பளத்தை அள்ளிக்கொடுத்து விட்டால் போதும். அவர்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கலாம் என்ற மனோபாவத்தில் அரசாங்கம் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மத்தளத்துக்கு இரண்ட