Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Subramanian Swamy

ஜெயலலிதாவை சிறை வைத்திருந்தாரா எம்ஜிஆர்?

ஜெயலலிதாவை சிறை வைத்திருந்தாரா எம்ஜிஆர்?

அரசியல், சென்னை, தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
மக்களின் மனம் கவர்ந்த தலைவர்களின் அந்தரங்க தகவல்களைத் தெரிந்து கொள்வதில் வெகுசன மக்களுக்கு என்றுமே ஓர் அலாதி தேடல் இருந்து கொண்டே இருக்கும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கண்ட நிலையில்கூட இன்றைக்கும் அவரைப்பற்றிய ஆச்சர்யப்படத்தக்க செய்திகள் வெளிந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது ஜெ.ஜெயலலிதா. எப்போதும் பரபரப்பு அரசியலுக்கு பெயர் பெற்றவர். அவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி, உடல்நலக்குறைவால் மறைந்தார். அரசியலிலும் சினிமாவிலும் எதிர்நீச்சல் அடித்தே பழக்கப்பட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை, ''ஜெயலலிதா: மனமும் மாயையும்'' என்ற பெயரில் மூத்த எழுத்தாளர் வாஸந்தி எழுதி இருக்கிறார். அந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நூலாசிரியர் வாஸந்தி, ஜெயலலிதாவைப் பற்றி பல ஆண்டுகளாகத் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த நூலை படைத்திருக்கிறார். அரசியல் மற்றும் வ
ரஜினி அரசியல்; பின்னணியில் பாஜக?

ரஜினி அரசியல்; பின்னணியில் பாஜக?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவது குறித்த முடிவின் பின்னணியில் பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் இருப்பதாக பரபரப்பு யூகங்கள் கிளம்பியுள்ளன. ஆன்மிக அரசியல் என்றதுகூட பாஜகவைத்தான் மறைமுகமாக ரஜினிகாந்த் முன்னிலைப்படுத்துகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24, 2017) ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு மூலம் டிடிவி தினகரன்தான் அன்றைய நாளை பரபரப்பில் வைத்திருந்தார். இன்றைய ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31, 2017) நடிகர் ரஜினிகாந்துக்கானதாக ஆகியிருக்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என கடந்த 21 ஆண்டாக நிலவி வந்த எதிர்பார்ப்புக்கு ஒருவழியாக இன்று முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. ''நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆன்மிக அரசியல்தான் எனது பாதை. உண்மை, உழைப்பு, உயர்வு அதுதான் என் கொள்கை. கடந்த ஓராண்டாக அரசியல் கெட்டுவிட்டது. இந்த சிஸ்டத்தை
டிடிவி தினகரன் ஜுரத்தில் ஆட்சியாளர்கள்;  ஆட்சியை கைப்பற்றுவாரா? கலைப்பாரா?

டிடிவி தினகரன் ஜுரத்தில் ஆட்சியாளர்கள்; ஆட்சியை கைப்பற்றுவாரா? கலைப்பாரா?

அரசியல், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
குமரியைப் புரட்டிப்போட்ட ஒகி புயலைக்கூட ஒப்பேற்றிவிட்ட இபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டணியினர், டிடிவி தினகரனின் எழுச்சியை சமாளிக்க முடியுமா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். கட்சி, ஆட்சி அதிகாரம் இரண்டிலும் மன்னார்குடி கும்பலின் சுவடே இருக்கக்கூடாது என்பதுதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு டெல்லி மேலிடம் இட்ட கட்டளை. குட்டாக இருந்தாலும் துட்டாக இருந்தாலும் வாங்கியே பழக்கப்பட்டவர்கள் இருப்பதை இழக்க விரும்புவார்களா என்ன? அதனால்தான் சமயம் பார்த்து, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஓரங்கட்டினர். காலடியிலேயே கிடந்தவர்கள் புதிய எஜமானர்களின் உத்தரவுக்கு அஞ்சி நடப்பதை சற்றும் ஜீரணிக்க இயலாத மன்னார்குடி கும்பல், ஆட்சி அதிகாரத்தில் நேரடியாக களமிறங்குவதுதான் கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்தனர். அதன் விளைவாகத்தான், அமலாக்கப
டிடிவி தினகரனை ஆதரித்தது ஏன்?; சுப்ரமணியன்சாமி ‘ராமாயண’ விளக்கம்!

டிடிவி தினகரனை ஆதரித்தது ஏன்?; சுப்ரமணியன்சாமி ‘ராமாயண’ விளக்கம்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சொந்தக் கட்சியான பாஜகவைவிட்டு டிடிவி தினகரனை ஆதரித்து ஏன் என்ற கேள்விக்கு, சுக்ரீவனை ராமர் எதற்காக உதவிக்கு அழைத்துக்கொண்டாரோ அதற்காகத்தான் என நூதனமாக பதில் அளித்துள்ளார். நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாக களம் இறங்கிய டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தவிர திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்த தேர்தலின்போது பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமி, பாஜகவைக்கூட முன்னிலைப்படுத்தாமல் சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரனை ஆதரித்து ட்விட்டரில் கருத்துகள் வெளியிட்டு வந்தார். தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசுக்கு பிரமதர் நரேந்திரமோடியின் பரிபூரண ஆசிர்வாதம் இருந்து வரும் நிலை