Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: sp deepa kanikar

கிடப்பில் போடப்பட்ட ‘காக்கி கருப்பு ஆடுகள்’ வழக்கு? கள்ள மவுனம் சாதிக்கும் சேலம் காவல்துறை!

கிடப்பில் போடப்பட்ட ‘காக்கி கருப்பு ஆடுகள்’ வழக்கு? கள்ள மவுனம் சாதிக்கும் சேலம் காவல்துறை!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆத்தூரில், காவல் ஆய்வாளரின் மிரட்டலால் நிதி நிறுவன அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த காக்கி துறைக்கும் அவப்பெயரை உண்டாக்கி இருக்கிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பில் இந்த வழக்கை கிடப்பில் போட்டதால், நிதி நிறுவன அதிபரை பறிகொடுத்த குடும்பம் கடும் அதிருப்தியில் உள்ளது.   சேலம் மாவட்டம் ஆத்தூர் வினாயகபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரேம்குமார் (49), தன் தம்பி செந்தில்குமாருடன் சேர்ந்து சொந்த ஊரில் தனலட்சுமி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மே 14ம் தேதி, திடீரென்று அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்து கிடந்தார். என்னமோ ஏதோ என்று பதற்றம் அடைந்த மனைவியும், இரு மகன்களும் பிரேம்குமாரை தூக்கிச்சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மறுநாள் காலையில் (மே 15) சிகிச்சை பலனின்றி பிரேம்குமா
ரவுடி கதிர்வேல் கொல்லப்பட்டது என்கவுண்டரில் அல்ல! அது ஒரு லாக்-அப் மரணம்!! சில்லிட வைக்கும் தகவல்கள்!!

ரவுடி கதிர்வேல் கொல்லப்பட்டது என்கவுண்டரில் அல்ல! அது ஒரு லாக்-அப் மரணம்!! சில்லிட வைக்கும் தகவல்கள்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியை போலி என்கவுண்டரில் தீர்த்துக்கட்டிவிட்டு, மாவட்டக் காவல்துறையினர் என்கவுண்டர் நாடகத்தை திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது அம்பலமாகி இருக்கிறது. சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே உள்ள தேவாங்கர் காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி கதிர் என்கிற கதிர்வேலை, சேலம் மாவட்ட காவல்துறையினர் மே 2ம் தேதி காலை 11 மணியளவில் எதிர்மோதலில் (என்கவுண்டர்) சுட்டுக்கொன்றது. காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணி தலைமையிலான தனிப்படையினர் இ ந்த ஆபரேஷனை செய்து முடித்துள்ளனர்.   ஆய்வாளர் சுப்ரமணியின் கைத்துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த ஒரே ஒரு தோட்டா கதிர்வேலின் மார்பை துளைத்து, மரணத்தை விளைவித்திருக்கிறது. கதிர்வேல், மூன்று கொலை, 9 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர். இதற்காக பலமுறை கைது செய்யப்பட்டு, சிறைப்பறவையாக இருந்திருக்கிறார். என்கவுண்டரை தொடர்
சேலம் ரவுடியை தீர்த்துக்கட்டிய 9 எம்.எம். பிஸ்டல்! பத்து ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டூமீல்!!

சேலம் ரவுடியை தீர்த்துக்கட்டிய 9 எம்.எம். பிஸ்டல்! பத்து ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டூமீல்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர், வியாழக்கிழமை (மே 2, 2019) காலையில் நடந்த எதிர்மோதல் (என்கவுண்டர்) தாக்குதலில் சுட்டுக்கொன்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதாலோ என்னவோ, மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சேலம் மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறையினர் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்குவதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு, முன்னாள் குற்றவாளிகள், பிணையில் வெளியே சுற்றும் ரவுடிகளின் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று அறிவுரைகளும், மென்மையான எச்சரிக்கையும் வழங்கினர்.   இது ஒருபுறம் நடந்தாலும், கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்தல், குண்டர் சட்டத்தில் அடைத்தல் போன்ற நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினர். மாநிலத்தில் வேறு எ