Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: shocked

பங்குச்சந்தை: 3 நாள்களில் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

பங்குச்சந்தை: 3 நாள்களில் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், வர்த்தகம்
தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச்சந்தைகள் இன்றும் (பிப்ரவரி 6, 2018) சரிவுடன் தொடங்கின. கடந்த மூன்று நாள்களில் மட்டும் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பங்குச்சந்தையில் நீண்டகால முதலீட்டிற்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினம் கடும் சரிவுடன் பங்குச்சந்தைகள் முடிவு பெற்றன. இதன் தாக்கம் மறுநாளும் தொடர்ந்தது. 2ம் தேதியன்றும் பெரும் சரிவுடனேயே பங்குச்சந்தைகள் தொடங்கின. இந்நிலையில், உலகளவில் பங்குச்சந்தைகள் இன்றைக்கு எதிர்பாராத சரிவை சந்தித்தன. அமெரிக்கா டாலருக்கான தேவை அதிகரிப்பு, அந்நாட்டு பங்குச்சந்தையிலும் எதிரொலித்தன. 6 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க பங்குச்சந்தையான டவ்ஜோன்ஸ் பெரும் சரிவுடன் இன்று தொடங்கியது. தைவான், ஜப்பான் நாடுகளிலும் பங்குச்சந்தைகள்
இதுதான் ‘மெர்சல்’ படத்தின் கதையா?; அட்லி அதிர்ச்சி

இதுதான் ‘மெர்சல்’ படத்தின் கதையா?; அட்லி அதிர்ச்சி

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இயக்குநர்கள் சங்கர், முருகதாஸ், மணிரத்னம் போனற பிரபல இயக்குநர்கள் தங்கள் படத்தின் கதை திரைக்கு வரும் வரை எள்ளளவு கசிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதேபோல், படமாக்கும் காட்சிகள்கூட வெளியாகக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளங்களில் நடிகர்கள் உள்பட ஊழியர்கள் மொபைல் போன் பயன்படுத்தவும் தடை விதிப்பார்கள். இப்போது ஏறக்குறைய எல்லா இயக்குநர்களுமே இதேபோன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த விஜயின் மெர்சல் படத்தின் கதை கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜயின் 61வது படமாக பிரம்மாண்ட பொருட்செயலரில் தயாராகி இருக்கிறது மெர்சல். முதல்முறையாக இந்தப் படத்தில் விஜய் மூன்று பாத்திரங்களில் நடித்துள்ளார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். வடிவேலுவும் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமை
அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்!

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்!

அரியலூர், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக ஒரு மாணவர், உயிரை மாய்த்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிளஸ்-2வில் 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தற்கொலையில் வீழ்வது அனிதா மட்டுமே அல்ல; இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏதோ ஒரு மூலையில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறது, தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கை (2015). கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 8934 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறுகிறது அந்த அறிக்கை. அதற்கு முந்தை