Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: share auto

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: தொழிலை விட்டு வெளியேறிய 40% ஆட்டோ ஓட்டுநர்கள்! கந்து வட்டிக்காரர்களிடம் வாகனங்கள் சரண்டர்!

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: தொழிலை விட்டு வெளியேறிய 40% ஆட்டோ ஓட்டுநர்கள்! கந்து வட்டிக்காரர்களிடம் வாகனங்கள் சரண்டர்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டத்தால், ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் சவாரியின்றி பெரும் நலிவைச் சந்தித்துள்ளனர்.   தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அக்கட்சி தெரிவித்து இருந்தது. ஆட்சிக்கு வந்த கையோடு, அத்திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது திமுக அரசு.   இதற்கு பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. சேலத்தை அடுத்த பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த பொன்னம்மாள் என்ற பெண் விவசாயி, ''கீரைக்கட்டுகளை எடுத்துக்கொண்டு தினமும் சேலம் மார்க்கெட்டுக்கு சென்று வர பஸ் செலவு மட்டும் தினமும் 30 ரூபாய் ஆகிவிடும்.   கூவிக்கூவி விற்பதால் காலையில் சீக்கிரமாகவே பசியெடுக்கும். அதற்காக ஏன் செலவு செய்ய வேண்டும் என்று பட்டின