Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: seeman

ரஜினியின் புதிய அரசியல் கட்சி ஜனவரி 14ல் அறிவிப்பு?

ரஜினியின் புதிய அரசியல் கட்சி ஜனவரி 14ல் அறிவிப்பு?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''அரசியலுக்கு வருவது உறுதி'' என்றதன் மூலம் இப்போதைக்கு தமிழக அரசியல் களத்தில் பரபர ஆக்ஷன் திரில்லர் நாயகனாக உருவெடுத்துள்ளார் ரஜினிகாந்த். ''ஆன்மிகம் தெரியும்; அரசியலும் தெரியும்; அதென்ன ஆன்மிக அரசியல்?. இரண்டும் எதிரெதிர் திசையில் பயணிக்கக் கூடியதாச்சே!" என்று பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது ரஜினியின் புதிய சூத்திரம். எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது, அவரிடம் கொள்கைகள் என்ன என்று கேட்டதற்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்தார். அதுதான், அண்ணாயிஸம். அதற்கே, கொந்தளிக்காதவர்கள் இப்போது ஆன்மிக அரசியலுக்காக தொண்டை வறல கூச்சல் போடுவானேன்?. பிறப்பால் ரஜினிகாந்த் தமிழர் அல்லர் என்று உரத்துச் சொல்பவர்களில் நாம் தமிழர் சீமானும், பாமகவின் அன்புமணி ராமதாஸூம் முக்கியமானவர்கள். இன அரசியலை மையமாக வைத்து களமாடி வரும் இருவருமே, ரஜினி வருகையால் அரசியலில் தங்கள் சுவடுகளே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்
மெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ

மெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ

சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்திருக்கும் மெர்சல் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் உள்பட ஏழெட்டு திரைப்படங்களின் கூட்டுக் கலவையாக வெளிவந்திருப்பதாக எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. மலையாளம், வங்கமொழிப் படங்களைப்போல தமிழ் படங்களில் கதையின் அடர்த்தி வலுவாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ரொம்ப காலமாகவே சொல்லப்படுவது உண்டு. அண்மைக்காலமாக தெலுங்கில் கூட நிறைய பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழில் இன்னும் அத்தகைய போக்கு வேகமெடுக்கவில்லை. ஆனால், பரீட்சார்த்த முயற்சிகள் அரிதாக முன்னெடுக்கப்படாமலும் இல்லை. இளம் இயக்குநர்களின் 'ஆரண்ய காண்டம்', 'அழகர்சாமியின் குதிரை', 'காக்காமுட்டை', 'குற்றமே தண்டனை', 'குற்றம் கடிதல்', 'ஒரு கிடாயின் கருணை மனு', 'குரங்குபொம்மை' போன்ற வித்தியாசமான முயற்சிகள் பரவலாக கவனம் பெற்றன. இந்தப்படங்களில் சில, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன.