Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: sales by naturo greeners

சிறுதானிய  தின்பண்டங்கள் :”நாவில் எச்சில் ஊறவைக்கும் தினை நெய் லட்டு, மாப்பிள்ளை சம்பா அதிரசம்”;  அசத்தும் சேலம் இளைஞர்

சிறுதானிய  தின்பண்டங்கள் :”நாவில் எச்சில் ஊறவைக்கும் தினை நெய் லட்டு, மாப்பிள்ளை சம்பா அதிரசம்”; அசத்தும் சேலம் இளைஞர்

சேலம், வர்த்தகம்
வணிகமயமான இன்றைய உலகில் தொழில் தர்மம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில், பாரம்பரிய சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில் 100 சதவீத வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கிறார், பிரபாகரன். சேலம் உடையாப்பட்டி செல்வநகரை சேர்ந்த பிரபாகரன், அடிப்படையில் எம்.இ., கணினி பொறியியல் பட்டதாரி. கடந்த சில ஆண்டுகளாக பாரம்பரிய விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இயற்கை விவசாயத்தின் நீட்சியாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனிவரகு, கம்பு, மூங்கில் அரிசி உள்ளிட்ட சிறுதானியங்களை விற்பனை செய்வதோடு, அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட தின்பண்டங்களாகவும் தயாரித்து விற்பனை செய்கிறார். அரிசியில் தயாரிக்கப்படும் அனைத்து உணவு வகைகளையும் சிறுதானியங்களிலும் செய்ய முடியும். மட்டுமின்றி, குழந்தைகள், பெரியவர்களுக்கு பிடித்தமான தின்பண்டங்களையும் சிறுதானியங்களில் தயாரிக்கலாம். தினை, சாமை, வர