Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: review

பூவனம்: காற்றில் மிதக்கும் வானம் (கவிதை)- விமர்சனம்!

பூவனம்: காற்றில் மிதக்கும் வானம் (கவிதை)- விமர்சனம்!

இலக்கியம், திண்டுக்கல், புத்தகம், முக்கிய செய்திகள்
(பூவனம்)   தமிழ்ச்சிற்றிதழ்கள் உலகில் தனக்கென்று தனித்த இடத்தை தக்க வைத்திருக்கும் கவிஞர் பெ.அறிவுடைநம்பியின் நான்காவது படைப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது, 'காற்றில் மிதக்கும் வானம்'. கவிதை நூல். 'விழியில் ததும்பும் நீர்', 'நீரில் ஆடும் நிலா', 'மழையில் நனைந்த மின்னல்' ஆகியவை இவருடைய முந்தைய படைப்புகள்.   கவிதை நூலுக்கு இவர் இடும் தலைப்பே ரசனையானது. ஆனால், காற்றில் வானம் மிதக்குமா? என்பது கவிஞனுக்கேயுரிய முரண். பூட்டுக்கு பெயர் பெற்ற திண்டுக்கல்காரர். எனினும் அவர், கற்பனை வளத்திற்கும், கவி புனையவும் ஒருபோதும் பூட்டிட்டுக் கொண்டதில்லை. அதனால்தான், கூட்டுறவுத்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, கவி உலகில் தும்பியாய் பறந்து கொண்டிருக்கிறார்.   படைப்பு நோக்கில் சொல்ல வேண்டுமானால் கவி-ஞர் பெ.அறிவுடைநம்பியிடம் எப்போதுமே ஓர் எள்ளல்தனம் இருக்கும். குறுங்கவிதைகளை 'நற
பாகமதி – சினிமா விமர்சனம்

பாகமதி – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் இன்று (ஜனவரி 26, 2018) ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது, 'பாகமதி'. ஹாரர் மற்றும் அரசியல் திரில்லர் கலந்த புதிய கோணத்தில் மிரட்டுகிறாள் பாகமதி. நடிப்பு: அனுஷ்கா, உண்ணி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், முரளி ஷர்மா, பிரபாஸ் சீனு, 'தலைவாசல்' விஜய், வித்யூலேகா, தேவதர்ஷினி மற்றும் பலர். இசை: எஸ்எஸ் தமன்; ஒளிப்பதிவு: மதி; எடிட்டிங்: கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்; தயாரிப்பு: ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ்; இயக்கம்: ஜி.அசோக். பாகமதி கதையை அனுஷ்காவிடம் கடந்த 2012ம் ஆண்டிலேயே சொல்லிவிட்டு, அவருடைய கால்ஷீட்டுக்காக அய்ந்து ஆண்டுகள் காத்திருந்தாராம் படத்தின் இயக்குநர். அந்த காத்திருப்பு, கொஞ்சமும் வீண் போகவில்லை. இயக்குநருக்கும், அனுஷ்காவிற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க படம்தான். கதை என்ன?: பாகமதியில், சஞ்சலா என்ற பாத்திரத்தில் அனுஷ்கா ஒரு நேர
இப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்

இப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்

சினிமா, முக்கிய செய்திகள்
சென்னையில் குண்டுகளை வெடிக்கச் செய்து நாச வேலைகளில் ஈடுபடும் ஒரு பயங்கரவாதியிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன், அவரிடம் இருந்து தப்பித்தாரா? குண்டுவெடிப்பில் இருந்து மக்களை காப்பாற்றினாரா? என்பதுதான், 'இப்படை வெல்லும்' படத்தின் ஒன்லைன். நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி, ராதிகா, எம்எஸ் பாஸ்கர், ரவி மரியா மற்றும் பலர். இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: ரிச்சர்டு டி நாதன்; எடிட்டிங்: பிரவீன்; தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்; இயக்கம்: கவுரவ் நாராயணன். சர்வதேச பயங்கரவாதியான சோட்டா (டேனியல் பாலாஜி), சென்னையில் சில இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, அமைதியை சீர்குலைக்க திட்டம் தீட்டுகிறார். அதற்காக அவர் உத்தரபிரதேச சிறையில் இருந்து தப்பித்து, சென்னை வந்து சேர்கிறார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நாயகன் மதுசூதனன் (உதயநிதி ஸ்டாலின்)