Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: retired judge

நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிடும் பெரியார் பல்கலை.! #PeriyarUniversity #பெரியார்பல்கலை

நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிடும் பெரியார் பல்கலை.! #PeriyarUniversity #பெரியார்பல்கலை

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதோடு, நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபட்டு வருவதாக பெரியார் பல்கலை மீது அதிருப்தி கிளம்பியுள்ளது.   நீதிமன்றம், காவல்துறை உத்தரவுகள் எல்லாம் எப்போதுமே விளிம்புநிலை மக்களை மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. அதிகார பலம், பொருளாதார பலம் கொண்டவர்கள் பெரும்பாலும் எவ்வித சட்டவிதிகளையும் முறையாக பின்பற்றுவதில்லை. அதற்கு சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் விதிவிலக்கு அல்ல. பெரியார் பல்கலையில் பொருளாதாரத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் வைத்தியநாதன். பத்திரிகைளுக்கு பல்கலையைப் பற்றி தவறாக செய்திகள் கொடுத்ததாக அவரிடம் விளக்கம் கேட்டு, அப்போதிருந்த துணைவேந்தர் சுவாமிநாதன் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கினார். இந்தப் புகாரின்பேரில், அவர் ஏப்ரல் 4, 2017ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.   இச்சம்பவத்திற்குப்
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் திடீரென்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சீறிப்பாய்ந்த விவகாரத்தின் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் உச்சபட்ச அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம். நிர்வாக ரீதியாக எத்தனை காழ்ப்புணர்வுகள் இருந்தாலும் ஆளும்தரப்புடனான ரகசிய லாபியுடன் சுமூக முடிவு எடுக்கப்பட்டு, விவகாரம் அமுக்கப்பட்டு விடும். ஆனால், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று (ஜனவரி 12, 2018) திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தது, இதுவரை இந்தியா வரலாற்றில் நிகழாதது. அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டமே, நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், பரபரப்பையும் எழுப்பிய நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சொல்லப்பட்ட குற
ஜெயலலிதா மருத்துவ அறிக்கை வெளியானதன் பின்னணி என்ன?: பரபரப்பு தகவல்கள்

ஜெயலலிதா மருத்துவ அறிக்கை வெளியானதன் பின்னணி என்ன?: பரபரப்பு தகவல்கள்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது இருந்த உடல்நிலை குறித்த அறிக்கை இன்று (செப். 28) திடீரென்று தனியார் தொலைக்காட்சியில் வெளியானதன் பின்னணியில், சசிகலா - டிடிவி தினகரன் தரப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மக்களே மறந்திருந்த ஜெயலலிதாவின் அப்பல்லோ மருத்துவமனை நினைவுகள், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டிகளால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. 'அம்மா இட்லியும் சாப்பிடவில்லை; சட்னியும் சாப்பிடவில்லை' என்று அவர் சொன்னது, கடந்த பத்து நாள்களாக மீண்டும் ஜெயலலிதா மரணத்தின் மீது மக்களின் கவனம் திசை திரும்ப காரணமாக அமைந்தது. அதேநேரம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் ஆகியோர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது தாங்கள் உள்பட எல்லா அமைச்சர்களும் நேரில் பார்த்தோம் என்று கூறினர். எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், மைனாரிட்டி அரசாங்கம், ஆட்சிக்கலைப்பு
ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி யார்?; காவல்துறையையே கலங்கடித்தவர்!

ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி யார்?; காவல்துறையையே கலங்கடித்தவர்!

அரசியல், கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி, போலீஸ் கமிஷனர் ஜார்ஜை கடுமையாக கண்டித்ததன் மூலம் பெரும் பரபரப்புக்கு உள்ளானார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். ஒரு மாதம் ஆகியும் அதற்கான அறிவிப்பு இல்லாதது குறித்து கடந்த 16ம் தேதி, நாமும், 'ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே? செய்வீர்களா?' என்ற தலைப்பில் புதிய அகராதி இணைய ஊடகத்தில் சிறப்புக் கட்டுரை எழுதி இருந்தோம். கடந்த சில நாள்களாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் பரபரப்பு சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இன்று (செப். 25) உத்தரவிட்ட
ஜெயலலிதா மரணம்: மாஜி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்

ஜெயலலிதா மரணம்: மாஜி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு செப். 22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாள்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி, கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இறந்தார். இதையடுத்து, உள்கட்சி பூசல்களால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தது. எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைய வேண்டுமெனில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட்