Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: resort

நீலகிரி: காட்டு யானையை உயிருடன் எரித்து கொன்ற ‘பகுத்தறிவு மிருகங்கள்’ கைது!

நீலகிரி: காட்டு யானையை உயிருடன் எரித்து கொன்ற ‘பகுத்தறிவு மிருகங்கள்’ கைது!

நீலகிரி, முக்கிய செய்திகள்
நீலகிரி அருகே, உணவு தேடி ரிசார்ட் பகுதிக்குள் நுழைந்த வாயில்லா ஜீவனான காட்டு யானையை விடுதி ஊழியர்கள் இருவர் எரியும் துணியை வீசி, உயிருடன் எரித்துக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மனித தன்மையற்ற இந்தச்செயலை இயற்கை ஆர்வலர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.   நீலகிரி மாவட்டம் மசினகுடியில் தனியார் ரிசார்ட் பகுதிக்குள் சில நாள்களுக்கு முன்பு, உணவும் தண்ணீரும் தேடி சுமார் 50 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. தற்போது ரிசார்ட்டுகள் நிறைந்து காணப்படும் மசினகுடி ஒரு காலத்தில் யானைகள் வந்து செல்லும் வலசையாக இருந்துள்ளது. பின்னர், வணிக நோக்கில் அங்கு பலர் விடுதிகளையும், குடியிருப்புகளையும் கட்டியதால் அடிக்கடி யானைகள் உணவு தேடி ஊருக்குள் நுழைவதும், அவற்றை மனிதர்கள் சேர்ந்து விரட்டி அடிப்பதும் தொடர்கிற
ஆசிரியர்களுக்கு குரல் கொடுக்கும் கமல்!

ஆசிரியர்களுக்கு குரல் கொடுக்கும் கமல்!

அரசியல், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆசிரியர்கள் பணிக்கு வராமல், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாட்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படாது எனில், ரிசார்ட்டில் தங்கியுள்ள குதிரைபேர எம்எல்ஏக்களுக்கு மட்டும் சம்பளம் கொடுக்கலாமா? என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக உள்கட்சி பூசல்களால் தமிழக மக்கள் நலன் பாதிக்கப்படுவது குறித்தும், ஆளுங்கட்சியின் ஊழல்கள் குறித்தும் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது, நல்லதொரு மாற்றம் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். 'டுவிட்டர் அரசியல்வாதி' என்று ஆளும் தரப்பும், பாஜகவும் கமல்ஹாசனை கிண்டல் அடித்தாலும், 'டுவிட்டரும் போராட்ட களம்தான்' என்று சளைக்காமல் பதிலடி கொடுத்தார். சமகால அரசியல் நகர்வுகள், சமூக பிரச்னைகள் குறித்து அவர் சமூகவலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருவது, அ
அதிமுக: முடிவுக்கு வருகிறது மன்னார்குடி ராஜ்ஜியம்?

அதிமுக: முடிவுக்கு வருகிறது மன்னார்குடி ராஜ்ஜியம்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அதிரடிகளால் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி கும்பலின் ராஜ்ஜியம் கூண்டோடு முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நாளன்று தொடங்கிய 'பிரேக்கிங் நியூஸ்' ஜுரம், இன்னும் தமிழக மின்னணு ஊடகங்களை விட்டு அகலவே இல்லை. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல்கள் குறித்த செய்திகள்தான் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஆக்கிரமித்து உள்ளன. நிரந்தர முதல்வர், நிரந்தர பொதுச்செயலாளர் என உச்சாணிக் கொம்பிலேயே ஜெயலலிதாவை வைத்து அழகு பார்த்த ரத்தத்தின் ரத்தங்கள்தான், அவர் மறைந்த பின்னர் சசிகலாவை 'சின்னம்மா' என்று வாஞ்சையோடு அழைத்தனர். அதிமுகவை காக்கும் ஒரே ரட்சகர் அவர்தான் என்று, சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியதும் இன்றைய முதல்வர், துணை முதல்வர் உள்¢ளிட்ட விசுவாசிகள்தான். 'இடத்தைக் கொடுத்தா