Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: released

சசிகலாவை வறுத்தெடுக்கும் ‘மீம்’ கிரியேட்டர்கள்!

சசிகலாவை வறுத்தெடுக்கும் ‘மீம்’ கிரியேட்டர்கள்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அவசரகால பரோல் விடுப்பில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கிண்டலடித்து நெட்டிஸன்கள் மீம்களை பதிவிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்கள் முழுவதும் சசிகலா பற்றிய மீம்களே அதிகளவில் வைரல் ஆகி வருகின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். கைதி எண்: 9234. அவருடைய கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இரு நாள்களுக்கு முன்பு, கல்லீரல், சிறுநீரகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரைக் காண்பதற்காக அவசரகால பரோல் விடுப்பில் இன்று (அக். 6) சிறையில் இருந்து விடுவிக்கப்பட
தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓராண்டாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து, புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹாராஷ்டிரா மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமி-ழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா உடல்நலக்குறைவு, அவருடைய மரணம், ஆளுங்கட்சியில் பிளவு போன்ற அரசியல் பரபரப்பு நிலவிய காலங்களில் நேரடி ஆளுநர் இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத நடைமுறையை நடுவண் பாஜக அரசு மேற்கொண்டது. ஒருகட்டத்தில், முதல்வர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக்கப்பட்டு, வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவரை முதல்வராக பதவியேற்க ஆளுநர் முறைப்படி அழ
சேலம் மாணவி  வளர்மதி விடுதலை

சேலம் மாணவி வளர்மதி விடுதலை

அரசியல், கோயம்பத்தூர், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குண்டர் தடுப்பு சட்டத்தில், கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சேலம் மாணவி வளர்மதி இன்று (செப். 7) மாலை பிணையில் விடுதைல செய்யப்பட்டார். சேலம் பள்ளிக்கூடத்தானூரைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி. பெரியார் பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்து வந்தார். இயற்கை பாதுகாப்புக்குழு என்ற அமைப்பின் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்த அமைப்பின் சார்பில் நெடுவாசல் ஹைட்ரோகார்பன், கதிராமங்கலம் ஓஎன்ஜிசி திட்டங்களைக் கண்டித்து மக்களிடம் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வந்தார். கடந்த ஜூலை 12ம் தேதி, சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகில், கதிராமங்கலம் பிரச்னை தொடர்பாகன மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருந்தார். அவர் அரசுக்கு எதிராக மாணவர்களை போராடத் தூண்டுவதாகக் கூறி, சேலம் மாநகர காவல்துறையினர் கைது செய்தனர். அடுத்த சில நாள்களில், நக்சல், மாவோயிஸ்ட