Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Ration grant cancellation Creating starvation death

ரேஷன் மானியம் ரத்து: பட்டினிச் சாவை உருவாக்கும்!

ரேஷன் மானியம் ரத்து: பட்டினிச் சாவை உருவாக்கும்!

இந்தியா, முக்கிய செய்திகள்
ரேஷன் மானியம் ரத்து குறித்த அறிவிப்பு, சாமானிய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.இந்திய அரசாங்கம் என்பது, சாமானிய மக்கள் நலன் நாடும் அரசு என்ற எண்ணவோட்டத்தில் இருந்து விலகிச்சென்று, கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு மட்டுமே இனி சேவகம் செய்யும் என்ற நிலைக்கு தன்னை உருமாற்றிக் கொண்டு வருகிறது. ரேஷன் கடைகளில் மானிய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய குடிமைப் பொருட்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என்பதுதான் தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான ஷரத்து. இதற்காகத்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடுமையாக இந்த சட்டத்தை எதிர்த்து வந்தார். அதற்கு மக்கள் நலன் மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. ஏனெனில், தமிழகத்தில் ரேஷன் அரிசி அரசியலும் ஒன்று இருக்கிறது. தமிழகத்தைப் பின்பற்றி மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட ஏனைய மாநில