Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Rajnikant

ஸ்ரீதேவி: உதிர்ந்தது செந்தூரப்பூ….!; ”கந்தக மண்ணில் பிறந்த கனவுக்கன்னி”

ஸ்ரீதேவி: உதிர்ந்தது செந்தூரப்பூ….!; ”கந்தக மண்ணில் பிறந்த கனவுக்கன்னி”

இந்தியா, சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், விருதுநகர்
ஸ்ரீதேவி: 13-08-1963 - 24-02-2018 விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்த அய்யப்பன் - ராஜேஸ்வரி தம்பதி, தங்கள் மகள், எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளையடிப்பாள் என ஒருபோதும் யோசித்திருக்க மாட்டார்கள். அந்த தம்பதியின் மகள், ஸ்ரீதேவி.   பட்டாசு தொழிற்சாலைகள் நிறைந்த சிவகாசி ஒரு கந்தக பூமி. அந்த மண்ணில் இருந்து ஒரு கனவுக்கன்னி, ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இந்திய சினிமாவை ஆட்சி செய்திருக்கிறார் என்பதும்கூட நமக்கான அடையாளம்தான். அவர் மரித்துப்போனார் என்பதைக் கூட நம்ப முடியாத வகையில் கோடிக்கணக்கான மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். பால் மனம் மாறாத வயதிலேயே ஸ்ரீதேவி வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டார். நான்கு வயதிலேயே, 'துணைவன்' படத்தில் முருகன் வேடம். எல்லா
ஸ்ரீதேவியின் ஆத்மா சாந்தி அடையாது!: நடிகர்கள் இரங்கல்

ஸ்ரீதேவியின் ஆத்மா சாந்தி அடையாது!: நடிகர்கள் இரங்கல்

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விருதுநகர்
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் திடீரென்று நேற்று இரவு (பிப்ரவரி 24, 2018) மரணம் அடைந்தது, அவருடைய ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. உடன் நடித்த நடிகர்கள் உள்பட திரையுலகைச் சார்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன்: ''மூன்றாம் பிறை பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை, கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்'' என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தனது இரங்கல் செய்தியை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''கடந்த மாதம்கூட ஸ்ரீதேவியை நான் நேரில் சந்தித்தேன். அப்போது அவர் என்னை வாஞ்சையுடன் பார்த்ததை கண்களில் கண்டேன். என் க