Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Rajini Forum

மலேசியாவில் ரஜினி பேச்சு: ட்விட்டரில் கிளம்பும் கடும் எதிர்ப்பு!

மலேசியாவில் ரஜினி பேச்சு: ட்விட்டரில் கிளம்பும் கடும் எதிர்ப்பு!

அரசியல், உலகம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வலைத்தளவாசிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பலர் கேலி செய்து, 'மீம்'களை பதிவிட்டுள்ளனர். தமிழகத்தில் இதற்குமுன் திரைத்துறையில் இருந்து எத்தனையோ நடிகர்கள், கலைஞர்கள் அரசியலுக்கு வந்திருந்த போதும் ரஜினி அளவுக்கு யாரும் கடும் எதிர்ப்பை சம்பாதித்ததில்லை. ஆனால், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ம் தேதி சொன்னாலும் சொன்னார், அவருக்கு பல்வேறு முனைகளில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசியல் வருகை குறித்து பேசிய அடுத்த நாளே ரஜினிகாந்த், ரசிகர் மன்றங்களை புதுப்பிக்க வசதியாக 'ரஜினி மன்றம்' என்ற பெயரில் புதிய இணையதளம் தொடங்கியது, ராமகிருஷ்ண மடாதிபதியிடம் ஆசி, திமுக தலைவர் கருணாநிதியுடன் சந்திப்பு, 'ரஜினி மன்றம்' என்பதை மாற்றி
இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங்  ஆன ரஜினியின் ‘#ஒரு நிமிஷம்-_ தலைசுத்திருச்சு!’

இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங் ஆன ரஜினியின் ‘#ஒரு நிமிஷம்-_ தலைசுத்திருச்சு!’

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சினிமாவில் மட்டுமில்லாமல் தனது சொந்த வாழ்க்கையில் ரஜினிகாந்த் பேசிய பேச்சும் இப்போது டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினி, விஜய், அஜீத், கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோரையும் நெட்டிஸன்கள் கிண்டலடித்துள்ளனர். கடந்த டிசம்பர் 31ம் தேதி தனது ரசிகர்களை சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றதுடன், ஆன்மிக அரசியல்தான் தனது கொள்கை என்றும் அறிவித்தார். அப்போது பேசுகையில், ''திடீரென்று ஒரு டிவி கேமராமேன் என்னிடம் வந்து உங்க கட்சியின் கொள்கைகள் என்ன என்று கேட்டார். எனக்கு அப்படியே ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு,'' என்று பேசினார். சமூக வலைத்தளமான ட்விட்டரில் ரஜினிகாந்த் சொன்ன, 'ஒரு நிமிஷம் தலைசுத்திருச்சு' என்ற பேச்சுதான் இன்று இந்திய அளவில் டிரெண்டிங் ஆகியிருக்கிறது. '#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு' என்ற பெயரில் ஹேஸ்டேக் செய்துள்ளனர்.