Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Raja Rani

மெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ

மெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ

சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்திருக்கும் மெர்சல் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் உள்பட ஏழெட்டு திரைப்படங்களின் கூட்டுக் கலவையாக வெளிவந்திருப்பதாக எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. மலையாளம், வங்கமொழிப் படங்களைப்போல தமிழ் படங்களில் கதையின் அடர்த்தி வலுவாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ரொம்ப காலமாகவே சொல்லப்படுவது உண்டு. அண்மைக்காலமாக தெலுங்கில் கூட நிறைய பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழில் இன்னும் அத்தகைய போக்கு வேகமெடுக்கவில்லை. ஆனால், பரீட்சார்த்த முயற்சிகள் அரிதாக முன்னெடுக்கப்படாமலும் இல்லை. இளம் இயக்குநர்களின் 'ஆரண்ய காண்டம்', 'அழகர்சாமியின் குதிரை', 'காக்காமுட்டை', 'குற்றமே தண்டனை', 'குற்றம் கடிதல்', 'ஒரு கிடாயின் கருணை மனு', 'குரங்குபொம்மை' போன்ற வித்தியாசமான முயற்சிகள் பரவலாக கவனம் பெற்றன. இந்தப்படங்களில் சில, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன.
மெர்சல் கருத்து: தமிழிசையை இப்படி செய்வது தகுமா?

மெர்சல் கருத்து: தமிழிசையை இப்படி செய்வது தகுமா?

அரசியல், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பற்றிய வசனத்திற்கு கண்டனம் தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசையை, சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து 'மீம்ஸ்'கள் மூலமாக 'கிழி கிழி' என்று கிழித்து தொங்கவிட்டுள்ளனர். விஜய் நடிப்பில் உருவான 'மெர்சல்' படம், கடந்த 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஏற்கனவே 'ராஜாராணி', 'தெறி' மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லீயின் இந்தப்படமும் வெற்றி பெற்றுள்ளது. முன்பு இயக்கிய இரு படங்களிலும் பழைய தமிழ் சினிமாக்களின் கதை, காட்சிகளின் சாயல்கள் இருப்பதுபோல் 'மெர்சல்' படத்திலும் 'அபூர்வ சகோதரர்கள்', 'மூன்று முகம்', 'சிவாஜி', 'ரமணா' ஆகிய படங்களின் சாயல்களும் இருக்கவே செய்கின்றன. படத்தில் இடம்பெற்றுள்ள புறா காட்சிகள், ராஜநாகம் காட்சிகள் குறித்த சந்தேகங்களால் இப்படத்துக்கு தணிக்கை வாரிய சான்றிதழ், விலங்குகள் நலவாரியத்திடம்
‘போதை’ நடிகருக்கு ஏற்பட்ட கதி!

‘போதை’ நடிகருக்கு ஏற்பட்ட கதி!

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'சுப்ரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெய். சென்னையில் வசிக்கிறார். கடந்த செப். 21ம் தேதி, அடையாறு பாலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச்சென்றார். திடீரென்று கார், பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காவல்துறை விசாரணையில் நடிகர் ஜெய், குடிபோதையில் காரை ஓட்டிச்சென்றது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஜெய் போக்குக் காட்டி வந்தார். அதனால் அவருக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரே இன்று (அக். 7) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட், திரைப்படத்தில் கார் ஓட்டுவதுபோல் நிஜத்திலும் ஓட்டினீர்களா? என்று எச்சரித்தார். அப்போது நடிகர் ஜெய் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடு