Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Rahul Gandhi

குஜராத், ஹிமாச்சலில் பாஜக வெற்றி!; காரணம் என்ன?; சரிகிறதா  மோடி இமேஜ்?

குஜராத், ஹிமாச்சலில் பாஜக வெற்றி!; காரணம் என்ன?; சரிகிறதா மோடி இமேஜ்?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
குஜராத் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்ததிலும், ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியதிலும் பாஜக அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், சொந்த மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு வெகுவாக சரிந்திருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தொடர்ந்து 6வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. சுயேட்சைகளுக்கு 6 இடங்கள் கிடைத்து இருக்கின்றன. ஹிமாச்சல்பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 44 இடங்களிலும், ஆளுங்கட்சியான காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வென்றுள்ளனர். ஹிமாச்சல் பிரதேசத்தை க
காங்கிரஸ் கட்சித் தலைவரானார் ராகுல் காந்தி!

காங்கிரஸ் கட்சித் தலைவரானார் ராகுல் காந்தி!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் 16ம் தேதி அவர் முறைப்படி தலைவர் பொறுப்பை ஏற்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக கடந்த 19 ஆண்டுகளாக இருந்து வருபவர் சோனியா காந்தி. சீதாராம் கேசரிக்குப் பிறகு, நேரு குடும்பத்தில் இருந்து அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியின் தேசிய துணைத்தலைவராக கடந்த 2013ல் நியமிக்கப்பட்டார் ராகுல் காந்தி. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்து வந்த காங்கிரஸ் கட்சி, கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தது. கடந்த 2004, 2009 என தொடர்ந்து இரு மக்களவை தேர்தல்களிலும் வெற்றி பெற்று மத்தியில் தொடர்ந்து ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி, அண்மைக் காலங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் ராகுல் காந்தியை நியமிக்
குஜராத்: முதல்கட்ட தேர்தலில் 68% வாக்குப்பதிவு

குஜராத்: முதல்கட்ட தேர்தலில் 68% வாக்குப்பதிவு

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இன்று (டிசம்பர் 9, 2017) நடந்த முதல்கட்ட தேர்தலில் 68% பேர் வாக்களித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக, 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. அம்மாநில முதலமைச்சர் விஜய்ருபானி உள்பட 977 வேட்பாளர்கள் இன்றைய வாக்குப்பதிவை சந்தித்தனர். இவர்களில் 57 பேர் பெண் வேட்பாளர்கள். சூரத் உள்ளிட்ட சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் எழுந்தாலும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. பகரூச் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மண மேடையில் முகூர்த்தம் முடிந்து திருமண கோலத்தில் நேராக வாக்குச்சாவடிக்கு வந்து தம்பதியர் ஓட்டுப்போட்டனர். உல்லேடா பகுதியில் 126
போர் விமானம் கொள்முதலில்  35 ஆயிரம் கோடி ஊழல்?;  மோடி மீது அடுத்த அட்டாக்!

போர் விமானம் கொள்முதலில் 35 ஆயிரம் கோடி ஊழல்?; மோடி மீது அடுத்த அட்டாக்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்திய ராணுவத்திற்கு ரஃபேல் ரக போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மூலம் ரூ.35 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புதிய குற்றச்சாட்டை காங்கிரஸ் கிளப்பி இருக்கிறது. இந்த புகாருக்காவது பிரதமர் மோடி பதில் அளிப்பாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. ஊழலை ஒழிப்பேன் என்ற முழக்கத்துடன் பிரதமர் அரியணையேறிய பாஜகவின் நரேந்திர மோடி, வல்லரசு கனவை நனவாக்குவதுதான் முதல் லட்சியம் என்றார். அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணமும், இந்தியாவுக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது என்றே அந்தப் பயணங்கள் குறித்த மதிப்பீட்டை மக்களிடம் பதிய வைத்து வருகிறது பாஜக. காவி கரங்களில் ஊழல் கறை படிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் பாஜக, அறிவியல்பூர்வமான கொள்ளைகளில் ஈடுபட திட்டமிட்டு, அதற்கேற்ப சட்டத்தையும் இயற்றி வருவது கண்கூடு. உதாரணத்திற்கு, அரசியல் கட்சிகளுக்கு ரூ.20
”பிரபாகரன் உடலைப் பார்த்து வேதனை அடைந்தேன்” – சொல்கிறார் ராகுல்காந்தி

”பிரபாகரன் உடலைப் பார்த்து வேதனை அடைந்தேன்” – சொல்கிறார் ராகுல்காந்தி

இந்தியா, உலகம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உடலைப் பார்த்து நானும், பிரியங்காவும் மிகவும் வேதனை அடைந்தோம் என்று காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார். குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் குஜராத்தில் இப்போதே பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். நேற்று (9/10/17) அந்த மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, வதோதராவில் தொழில் அதிபர்களைச் சந்தித்து உரையாடினார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அவரும் சகஜமாக அவற்றுக்கு பதில் அளித்தார். அப்போது ராகுல் காந்தி கூறுகையில், ''இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் பாஜக அரசு மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. நம் நாட்டில் தினமும் 30 ஆயிரம் இளைஞர்கள் படித்து முடித்து வெளிய