Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Puducherry

முதுகெலும்பற்ற அடிமைகளும் மூளையற்ற பக்தாள்களும்!

முதுகெலும்பற்ற அடிமைகளும் மூளையற்ற பக்தாள்களும்!

அரசியல், கோயம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு நடந்து வரும் ஆளுநரின் ஆய்வுப்பணிகளுக்கு பல்வேறு மட்டத்திலும் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தமிழக அரசை ஆளுநர் மூலம் நிர்வாகம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாரதியார் பல்கலைக்கழகத்தின பட்டமளிப்பு விழாவிற்காகக் கோயம்புத்தூருக்குச் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பட்டங்களை வழங்கியதோடு ராஜ்பவனுக்கு திரும்பி இருக்கலாம். என்ன நினைத்தாரோ, திடீரென்று அவர் கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அரசின் நலத்திட்டப்பணிகள் குறித்த ஆய்வு என்ற பெயரில் கோதாவில் குதித்தார். பாஜகவை சும்மாவே தெறிக்கவிடும் எதிர்க்கட்சிகள் விடுவார்களா?. அக்கட்சியை கடும் விமர்சனங்களால் பிராண்டி எடுத்து வருகிறார்கள். 'தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஆளுநர் ஆய்வு செய்கிறார். அதில் ஒன்றும் தவறு இல்லை' என்று பாஜக
அரசுப்பள்ளிகள் மேம்பட என்ன செய்ய வேண்டும்? – டான்சீன் யோசனை

அரசுப்பள்ளிகள் மேம்பட என்ன செய்ய வேண்டும்? – டான்சீன் யோசனை

கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிலையங்கள் சங்கம் (டான்சீன் - TANCEAN-Tamilnadu Catholic Educational Association ), தமிழ்வழிப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக சில யோசனைகளை தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் கீழ், தமிழகம், புதுவையில் 2630 கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. டான்சீன் கல்வியாளர்கள் கூட்டம் கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகம், புதுவையில் நடந்தது. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் காக்கப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர். அந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் முக்கிய அம்சங்கள்: தமிழ்வழிப் பள்ளிகளின் இன்றைய நிலை: பொதுமக்களிடையே ஆங்கிலவழிக் கல்வி மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஆங்கிலத்தில் பேசுவது, படிப்பது பெருமை என மக்கள் எண்ணுகிறார்கள். மிகவும் ஏழை குழந்தைகளின் தேர்வாக மட