Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: public sector banks

வராக்கடன்: 4 ஆண்டுகளில் 2.72 லட்சம் கோடி தள்ளுபடி!;  ஏழைகளை மட்டும் வஞ்சிக்கும் அரசு

வராக்கடன்: 4 ஆண்டுகளில் 2.72 லட்சம் கோடி தள்ளுபடி!; ஏழைகளை மட்டும் வஞ்சிக்கும் அரசு

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த நான்கு ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகளில் பெரு முதலாளிகள் வாங்கியிருந்த கடனில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 558 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஓர் ஏழை விவசாயி வாங்கியிருந்த டிராக்டர் கடனை வசூலிக்க அடியாள்களை அனுப்பும் வங்கி நிர்வாகங்கள், சர்வ வல்லமை படைத்த பெரு முதலாளிகளிடம் கைக்கட்டி நின்று சேவகம் செய்கிறது. பொய்த்துப் போன வானத்தால், கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கேட்கும் விவசாயிகளை அடித்தே கொல்கின்றனர் வங்கியாளர்களும், காவல்துறையினரும். கடனை பெற்றுவிட்டு, அதையும் திருப்பிச் செலுத்தாமல் போக்குக் காட்டிவரும் பெரும் பணமுதலைகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்கு வழியனுப்பி வைக்கிறது இந்திய அரசு. கல்விக்கடன் கேட்டாலோ, முத்ரா திட்டத்தில் சில லட்சங்களை தொழில் தொடங்க கடன் கேட்டுச் செல்லும் சாமானியர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு வதைக்கும் வங்கிய