Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: pseudo democracy

வீரம் என்றால் என்ன தெரியுமா? போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #3

வீரம் என்றால் என்ன தெரியுமா? போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #3

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
விடிந்தால், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை இந்நேரத்தில் வாக்காளர்கள் முடிவு செய்திருக்கக் கூடும். எனினும், தேர்தல் ஜனநாயகத்தின் பெருமதிப்பிற்குரிய வாக்காளர்களிடம் கொஞ்சம் உரையாட விரும்பியே இந்த பதிவை எழுதுகிறேன்.   களத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிறம் உண்டு. எத்தனை நிறங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவை ஒரே வண்ணத்தின் நிறப்பிரிகைகள்தான்.   அதாவது, 99 விழுக்காடு கட்சிகள் முதலாளிய வர்க்கத்தினருக்கு ஆதரவானவை. உழைக்கும் வர்க்கத்திற்காக பேசக்கூடியவை எப்போதும் பொதுவுடைமைக் கட்சிகளே.   தமிழகத்தைப் பொருத்தவரை பொதுவுடைமைக் கட்சிகளும் கூட்டணி விசுவாசம் என்ற பெயரில் தன் சுயத்தை எப்போதோ தொலைத்துவிட்டு, முதலாளிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிரு
போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #2

போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #2

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம், வழக்கம்போல கனல் கக்குகிறது. இதுவரையிலான தமிழக தேர்தல் வரலாற்றில், இந்த தேர்தலானது அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கும் முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மக்களும் கூட, தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள வழக்கத்தை விடவும் கூடுதல் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.   நாளை (ஏப். 6) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள இந்த கடைசி நிமிடத்தில், திருவாளர் பொதுஜனங்களின் சிந்தனைக்காக சில சங்கதிகளை பேச விழைகிறேன். சற்றே நீளமான பதிவுதான். இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக கொஞ்சம் பொறுமை காத்து செவிசாய்க்க வேண்டுகிறேன்.   களத்தில் எத்தனை முனை போட்டி நிலவினாலும், நீங்கள் திமுக அல்லது அதிமுக கூட்டணி ஆகியவற்றில் ஒன்றைத்தான் தேர்வு செய்யப் போகிறீர்கள். எவற்றையெல்லாம் முன்வைத்து இங்கே ஒரு கூட்டணியை புற