Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Pressure Cooker!

ஆர்.கே.நகர்: 89013 ஓட்டுகள் பெற்று டிடிவி தினகரன் வெற்றி; டெபாசிட் இழந்தது திமுக; முழு விவரம்

ஆர்.கே.நகர்: 89013 ஓட்டுகள் பெற்று டிடிவி தினகரன் வெற்றி; டெபாசிட் இழந்தது திமுக; முழு விவரம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பிரஷ்ஷர் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன், 89013 வாக்குகள் பெற்று அமோக பெற்றி பெற்றார். ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட அவர் 40707 வாக்குகள் கூடுதலாக பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட திமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அவர் உடல்நலக்குறைவால் இறந்தார். கடந்த ஓராண்டாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதற்கிடையே ஆளும் அதிமுகவுக்குள் ஏற்பட்ட உள்கட்சி பிரச்னைகளால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஓரணியாகவும், டிடிவி தினகரன் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவு பட்டது. முடக்கப்பட்டு இருந்த இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சிப்
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவும் பிரஷ்ஷர் குக்கரின் கடைசி விசிலும்!

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவும் பிரஷ்ஷர் குக்கரின் கடைசி விசிலும்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சாவுக்கு ஒரு ஓட்டு; நோவுக்கு ஒரு ஓட்டு என்று அரசியல் செய்வதில் அதிமுககாரர்கள் கில்லாடிகள் என்பதற்கு, அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக இன்று (டிசம்பர் 20, 2017), வெளியான வீடியோ இன்னுமொரு சான்று. ஜெயலலிதா இறந்து ஓராண்டு ஆகியும் அவருடைய மரணம் குறித்த சர்ச்சைகள் இறக்கை கட்டிப் பறந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசித்துப் பார்த்தால், அம்மா இட்லி சாப்பிட்டார் என்பது முதல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரதாப் சி ரெட்டியின் அண்மைய அறிக்கை முதல் எல்லாவற்றிலும் ஒரு முரண்பாடு இருப்பதை அறிய முடியும். ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே சீரியஸ் நிலையில்தான் இருந்தார் என்று பிரதாப் சி ரெட்டி சொன்னதற்கு, சட்டம்&ஒழுங்கு கெட்டுவிடக்கூடாது என்பதுதான் காரணம் என நியாயம் கற்பிக்கிறார். நாளை (டிசம்பர் 21, 2017) ஆர்கே நகர்