Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: poolavari

”டிடிவி தினகரன் மக்களின் முதல்வரா?”; ஜெயலலிதா விசுவாசிகள் அப்செட்!

”டிடிவி தினகரன் மக்களின் முதல்வரா?”; ஜெயலலிதா விசுவாசிகள் அப்செட்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்திற்கு வந்திருந்த டிடிவி தினகரனை வரவேற்று சாலையெங்கும் வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்டுகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை மிஞ்சும் அளவுக்கு வரவேற்பு வாசகங்கள் இருந்ததைக் கண்டு தீவிர எம்ஜிஆர் விசுவாசிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். சேலத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழா மற்றும் கட்சிக் கொடியேற்றும் விழாக்களில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) தலைவர் டிடிவி தினகரன் இன்று சேலம் (ஜூலை 7, 2018) வந்திருந்தார். குரங்குசாவடி அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அவர் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.   வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், அமமுக தலைமைக் கழக செயலாளருமான எஸ்.கே.செல்வம் வசிக்கும் பூலாவரி அருகே உள்ள ஒரு மண்டபத்தில், திருமண விழா நடந்தது. இதனால் ஹோட்டல் அருகிலும், பிறகு கொண்டலாம்பட்டியில் இருந்து எஸ்.கே. செல்வம் வீடு
”எங்களை உசுரோட கொளுத்திட்டு நிலத்தை எடுத்துட்டுப் போங்கடா…!”: எட்டு வழிச்சாலை நில அளவீட்டின் கடைசி நாள் பதிவுகள்!!#எட்டு வழிச்சாலை

”எங்களை உசுரோட கொளுத்திட்டு நிலத்தை எடுத்துட்டுப் போங்கடா…!”: எட்டு வழிச்சாலை நில அளவீட்டின் கடைசி நாள் பதிவுகள்!!#எட்டு வழிச்சாலை

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
'எடப்பாடி பழனிசாமி மீது சாபம்', 'விஷம் கொடுத்து கொன்று விடுங்கள்', 'உயிரோடு கொளுத்திவிட்டு நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள்...' என சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கான நிலம் அளவீட்டுப் பணிகளின் கடைசி நாளான இன்று, பல்வேறு உணர்ச்சிகரமான போராட்டங்களுடன் முடிந்தது.   சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை 10 ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.   சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக பசுமைவழி விரைவுச்சாலை அமைகிறது. 277.3 கி.மீ. தொலைவுக்கு இந்த சாலை போடப்படுகிறது.   இதற்காக மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களிலும் 159 கிராமங்களில் 2343 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 85 சதவீத பரப்பளவு விளைச்சல் நிலங்கள். 100 ஹெக்