Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Pongal

குலேபகாவலி – சினிமா விமர்சனம்

குலேபகாவலி – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில், 15 நாள் இடைவெளியில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம், 'குலேபகாவலி'. உலகம் எங்கும் இன்று (ஜனவரி 12, 2018) வெளியாகி இருக்கிறது. நடிப்பு: பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, 'முனீஸ்காந்த்' ராம்தாஸ், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகி பாபு, சத்யன் மற்றும் பலர்; இசை: விவேக் & மெர்வின்; ஒளிப்பதிவு: ஆனந்தகுமார்; தயாரிப்பு: கேஜேஆர்; இயக்கம்: கல்யாண். கதை என்ன?: பிரிட்டிஷ்காரர் ஒருவர் 1945ம் ஆண்டு, இந்தியாவை விட்டு வெளியேறுகிறார். அவர் செல்லும்போது, அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த வைரங்களை திருடும் இந்தியர் ஒருவர், அதை குலேபகாவலி என்ற கிராமத்தில் புதைத்து வைக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த இந்தியரின் பேரனுக்கு குலேபகாவலி கிராமத்தில் வைர புதையல் இருப்பது தெரிய வருகிறது. அதை எடுக்க இந்தியாவுக்கு வரும் அவர், சிலை கடத்தும் கும்பலிடம் அந்த பொறுப்பை ஒப்படை
தமிழக அரசு ஆஹா…ஓஹோ…!; ஆளுநர் உரையில் பாராட்டு; முழு விவரம்

தமிழக அரசு ஆஹா…ஓஹோ…!; ஆளுநர் உரையில் பாராட்டு; முழு விவரம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டப்பேரவை நடப்பு ஆண்டில் முதல்முறையாக ஆளுநர் உரையுடன் இன்று (ஜனவரி 8, 2017) தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆங்கிலத்தில் தனது உரையை வாசித்தார். முன்னதாக அவர், 'அனைவருக்கும் வணக்கம்' என்று தமிழில் கூறினார். இடையில் எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டபோதும், 'உட்காருங்க' என்று தமிழில் பேசினார். தமிழகத்தில் நிதி பற்றாக்குறை இருப்பினும் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டினார். ஆளுநர் உரையின் முழு விவரம்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள் நல்ல முறையில் இடைவிடாது செயல்படுத்தப்படுகின்றன. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.84 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 29, 2017) அறிவித்துள்ளார். பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீள கரும்புத் துண்டு-1, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அந்த பரிசுத்தொகுப்பில் அடங்கும். இதன்மூலம் அரசுக்கு ரூ.210 கோடி கூடுதல் செலவாகும் என்றும், அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் விழாவுக்கு முன்னதாக பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.