Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: political platform

‘ஆண்டவர்’ ஆட்டம் ஆரம்பம்!

‘ஆண்டவர்’ ஆட்டம் ஆரம்பம்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் குதித்து விட்டாரா இல்லையா? என்று இன்னும் காட்சி ஊடகங்கள் அவரிடம் கேள்வி எழுப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்கேற்ப அவரும், 'இன்னும் சமையல் வேலை முடியவில்லை' என்பார்; அல்லது, 'ஓட்டுப் போடும்போதே அரசியலுக்கு வந்துவிட்டேன்' என்பார். இப்படி பூடகமாக பேசுவதும், 'ட்வீட்' போடுவதிலும் கமல் பி.ஹெச்டி., முடித்தவர்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 3) ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு கமலின் அரசியல் என்ட்ரி உறுதியானது பற்றி தெளிவாக புரிந்திருக்கும். அவர் நடிகர் சக்தியிடம் பேசுகையில், ''இனிமேல் நான் அரசியல்வாதிகளை நக்கல் செய்ய முடியாது. எனக்கு இனி முகமூடி தேவையில்லை,'' என்பார். இப்படி குறியீடுகள் வாயிலாக பேசுவது கமலுக்கே உரித்தானது. அவருடைய பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி, அரசியல் நுழைவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகி