எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் நோன்பு இருக்கவும் போலீசார் தடை! 15 விவசாயிகள் திடீர் கைது!!
சேலம் அருகே, எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் உண்ணாநோன்பு இருக்க முயன்ற 15 விவசாயிகளை போலீசார் இன்று (ஆகஸ்ட் 5, 2018) கைது செய்தனர்.
சேலம் - சென்னை இடையே அமையவுள்ள எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக்கு எதிராக சேலம் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கறவை மாடுகளுக்கு கருப்புக்கொடி கட்டியும், அம்மனுக்கு பொங்கலிட்டு கோரிக்கை மனு கொடுத்தும் பண்பாட்டுத் தளத்தில் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குள்ளம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயில் வளாகத்தில் இன்று காலை 10.15 மணியளவில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடினர். எட்டு வழிச்சாலையை வரவிடாமல் தடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க வேண்டும் என்று