Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Penalty

ஊழலை அம்பலப்படுத்தினால் தண்டனை; அடக்கி வாசித்தால் புரமோஷன்! பெரியார் பல்கலை வகுத்த புதிய சிலபஸ்!! #PeriyarUniversity #Scam

ஊழலை அம்பலப்படுத்தினால் தண்டனை; அடக்கி வாசித்தால் புரமோஷன்! பெரியார் பல்கலை வகுத்த புதிய சிலபஸ்!! #PeriyarUniversity #Scam

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தினால் தண்டனையும், தில்லுமுல்லுகளை கண்டும்காணாமல் அடக்கி வாசித்தால் பதவி உயர்வும் வழங்கும் விந்தையான நடைமுறைகளை பெரியார் பல்கலையில் பின்பற்றப்படுவது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.   பெரியார் பல்கலை   சேலம் பெரியார் பல்கலை 28 துறைகளுடன், 101 கல்லூரிகள் இணைவுடன் இயங்கி வருகிறது. பல்கலையில், 150க்கும் மேற்பட்ட உதவி / இணை / பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.   இப்பல்கலையில் 2014ம் ஆண்டு ஜூன் முதல் 2017 ஜூன் வரை மூன்று ஆண்டுகள் சுவாமிநாதன் என்பவர் துணைவேந்தராக பணியாற்றி வந்தார். அவர் பணியில் இருந்த காலக்கட்டத்தில் பெரியார் பல்கலை மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள உதவி பெறும் கல்லூரிகளில் 136 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட்டன.   ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொருவரிடம் இருந்தும் 25 லட்சம் மு
”பெண்களைவிட ஆண்களுக்கு  அதிக சம்பளம் கொடுத்தால் தண்டனை!”; எங்கே தெரியுமா?

”பெண்களைவிட ஆண்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தால் தண்டனை!”; எங்கே தெரியுமா?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சம வேலைக்கு சம ஊதியமே தர மாட்டேங்கிறார்கள் என்ற புலம்பல்கள் அதிகரித்திருக்கும் இந்த வேளையில், ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு குறைவாக ஊதியம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று தடாலடியாக சட்டம் கொண்டு வந்திருக்கிறது ஐஸ்லாந்து. ஆண், பெண் பாலின சமத்துவத்தில் ஆசிய நாடுகளைவிட ஐரோப்பிய நாடுகள் எப்போதும் ஒரு படி மேலேதான் இருக்கிறது எனலாம். அட, நம்ம இந்தியாவில் ஆண்கள் செய்யும் அதே வேலையை பெண்கள் செய்தாலும்கூட, ஆண்களுக்கு கொடுக்கப்படும் அளவுக்கு சம்பளமே கொடுக்கப்படுவது இல்லை. ஆண்கள் பெறும் ஊதியத்தில் 60 முதல் 70 விழுக்காடுதான் பெண்களின் ஊதியமாக இருக்கிறது. இத்தனைக்கும் நம்ம நாட்டு மக்கள்தொகையில் சரிபாதி பெண்கள். இந்தியா மட்டுமல்ல. உலகம் முழுவதுமே பெண்கள் எல்லா இடங்களிலும் பாலின பாகுபாட்டை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளிலும் இந்த பிரச்னை இருக்க