Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Paramakudi

கமல்ஹாஸனின் இலக்கு யார்? அடுத்த பயணம் எங்கே?

கமல்ஹாஸனின் இலக்கு யார்? அடுத்த பயணம் எங்கே?

அரசியல், தமிழ்நாடு, திருச்சி, மதுரை, முக்கிய செய்திகள்
'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரம் அது. டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு, அனிதா மரணம் குறித்து கமல்ஹாஸன் ட்விட்டர் பக்கங்களில் ஆளுங்கட்சியை காட்டமாக விமர்சிக்க, பதிலுக்கு ஆளும் தரப்பும் வார்த்தைப் போரில் ஈடுபட்டது. ''ட்விட்டரில் மட்டும் அரசியல் செய்தால் போதாது. துணிச்சல் இருந்தால் களத்திற்கு வரட்டும்'' என அதிமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் கமல்ஹாஸனை சீண்டிக்கொண்டே இருந்தனர். நேற்றைய தினம், கமல்ஹாஸன் புதிய கட்சியை தொடங்கி, எல்லோரையும் அதிரடித்துவிட்டார். நேற்றைய தினம் கமல்ஹாஸன் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்றே சொல்லலாம். காலை 7.45 மணிக்கு துவங்கிய பயணம் இரவு 10 மணிக்குதான் முடிந்திருக்கிறது. ராமேஸ்வரத்தில் உள்ள, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீடு, அவருடைய நினைவிடம், சொந்த ஊரான பரமக்குடி விஜயம், பிறகு மதுரை மாநாடு என புயலாகச் சுழன்றடித்துள்ளார். கமல், சினிமாவில் உ