Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: opening ceremony

மேட்டூர் அணை திறப்பு விழாவில் கண்ணீர் விட்ட எடப்பாடி!

மேட்டூர் அணை திறப்பு விழாவில் கண்ணீர் விட்ட எடப்பாடி!

அரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கரூர், சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், முக்கிய செய்திகள், ராமநாதபுரம்
  மேட்டூர் அணை திறப்பு விழாவில், காவிரிக்காக இறுதிமூச்சு உள்ளவரை போராடியவர் புரட்சித்தலைவி அம்மா என ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரைப்பற்றி குறிப்பிடும்போது நா தழுதழுக்க...கண்களில் நீர் ததும்ப பேசினார்.     கடந்த பத்து நாள்களுக்கு மேலாக கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து பாதுகாப்புக்கருதி அந்த அணைகளில் இருந்து உபரி நீர், தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. கர்நாடகாவில் இருந்து நாளுக்கு நாள் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தமி-ழகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ப
கமல் – ரஜினி: இருதுருவ அரசியலா? இணைந்த கைகளா?

கமல் – ரஜினி: இருதுருவ அரசியலா? இணைந்த கைகளா?

அரசியல், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விரைவில் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த கமல்ஹாசன், தன்னை மக்களுக்கு பிடிக்கவில்லை எனில், மக்கள் விரும்பும் ஒருவருக்கு இயன்ற உதவிகள் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று திடீரென்று பல்டி அடித்துள்ளார். கோடம்பாக்கம் என்பது திரையுலகின் கனவுத்தொழிற்சாலை மட்டுமல்ல. அது, அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் தலைவர்களை உருவாக்கும் தொழிற்கூடமாகவும் இருந்து வந்திருக்கிறது. இப்போதும் தமிழர்களில் கணிசமானோர் கோடம்பாக்கத்தின் வாசலில்தான் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். கமல், ரஜினி ஆகியோருக்குள் எழுந்துள்ள அரசியல் அபிலாஷைகளும் அத்தகையதுதான். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பது தேர்தலில்தான் தெரியும். இருவருமே தனித்து இயங்குவது குறித்துதான் பேசி வருகின்றனர். ஆனாலும், தமிழருவி மணியன் போன்றவர்கள் ரஜினி, கமல் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தங்களின் உள்ளக்கிடக்கையை வெளிப