Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: obesity

உடல் பருமனான பெண்கள் பேரல் போன்றவர்களா? தனியார் ஜிம் மீது பாய்ச்சல்

உடல் பருமனான பெண்கள் பேரல் போன்றவர்களா? தனியார் ஜிம் மீது பாய்ச்சல்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இலங்கையில் உள்ள ஓஸ்மோ என்ற தனியார் உடற்பயிற்சி நிறுவனம் (ஜிம்), உடல் பருமனான பெண்களை பீப்பாயுடன் (பேரல்) ஒப்பிட்டு வைத்திருந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அந்நிறுவனத்தை இணையவாசிகள் தொடர்ந்து புரட்டி எடுத்து வருகின்றனர். உடல் பருமன் இன்று இளைய தலைமுறையினரை வாட்டி எடுக்கும் பிரச்சனையாக உள்ளது. ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உடல் பருமன் சமூக பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது. மாறிவரும் உணவு பழக்கம், முறையற்ற வேலை நேரம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால், ஆண், பெண் என இருபாலினத்தவரும் பாதிக்கப்பட்டாலும், பெண்கள் அதனால் பலராலும் பொதுவெளியில் அவமானபடுத்தப்படுகின்றனர். உடற்பயிற்சி கூடங்களில் விளம்பரம் கூட பெண்களை மையப்படுத்திதான் உள்ளது. பெண்கள் இந்த வடிவத்திலும், அளவிலும் இருக்க வேண்டும் என்றே
மேகி நூடுல்ஸூக்கு மீண்டும் இடியாப்ப சிக்கல்!

மேகி நூடுல்ஸூக்கு மீண்டும் இடியாப்ப சிக்கல்!

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுஸ்ல்ஸே இடியாப்பம் போலத்தான் சுருண்டு கிடக்கும். அதற்குத்தான் இப்போது மீண்டும் இடியாப்ப சிக்கல் ஆரம்பமாகி இருக்கிறது. நம்ம ஊர்களில் குறிப்பாக கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில் இரண்டே நிமிடங்களில் சமையல் வேலை முடிகிறது எனில் நிச்சயம் அவர்கள் வீட்டில் அன்றைய தினம், நூடுல்ஸ்தான் முக்கிய உணவாக இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம். அந்தளவுக்கு நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவாகவும் இருந்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டில் ஒருமுறை தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மேகி நூடுல்ஸில் அதிர்ச்சிகரமான பல ரசாயனங்கள் சுவைக்காக சேர்க்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுபோன்ற துரித உணவுகளில் 0.01 முதல் 2.5 பிபிஎம் வரை மட்டுமே காரீயம் சேர்க்கப்பட வேண்டும். இது ஒருவகையான செ