Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: nominations

சேலம்: உள்ளாட்சி தேர்தலில் 17216 பேர் வேட்புமனு; இன்று பரிசீலனை!

சேலம்: உள்ளாட்சி தேர்தலில் 17216 பேர் வேட்புமனு; இன்று பரிசீலனை!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மொத்தம் 17216 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீது இன்று (டிச. 17) பரிசீலனை நடக்கிறது. கடைசி நாளான நேற்று ஒரே நாளில், 8219 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.   தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30ம் தேதியும் நடக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் இத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, கடந்த 9ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, கடைசி நாளான நேற்று (டிசம்பர் 16, 2019) மட்டும் 29 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 163 பேரும், 20 ஒன்றியங்களில் உள்ள 288 ஊராட
சேலம்: உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

சேலம்: உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

சேலம், முக்கிய செய்திகள்
ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (டிசம்பர் 9) தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நேரடியாக 4299 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.   தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்கட்ட தேர்தல் வரும் 27.12.2019ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30.12.2019ம் தேதியும் நடக்கிறது. தேர்தல் நடக்கும் நாளன்று, வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை, வரும் 2.1.2020ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.   மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர்