Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Nellai District

ரத யாத்திரை சர்ச்சை: வேல்முருகன் திடீர் கைது!

ரத யாத்திரை சர்ச்சை: வேல்முருகன் திடீர் கைது!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழகம் வரும் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் உள்பட 25 பேரை செங்கல்பட்டு காவல்துறையினர் இன்று (மார்ச் 19, 2018) இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென்று கைது செய்தனர். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், ராம ராஜ்ய ரத யாத்திரை என்ற பெயரில் சில மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் ஏற்கனவே வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐந்து மாநிலங்களைக் கடந்து, ரத யாத்திரை நாளை (மார்ச் 20, 2018) திருநெல்வேலி மாவட்டம் புளியரை வந்து சேர்கிறது. அங்கு ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.   ரத யாத்திரைக்கு தமி-ழகத்தில் தடை விதிக்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை!

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை!

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
சென்னை மதுரவாயலைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர், ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளை கும்பலால் இன்று (டிசம்பர் 13, 2017) சுட்டுக்கொல்லப்பட்டார். வீர மரணம் அடைந்த ஆய்வாளருக்கு, சக காவல்துறையினர் இரங்கலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த தேவர்குளம் சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன் (48). சென்னை மதுரவாயல் டி-4 காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதிதான் இந்த காவல் சரகத்திற்கு மாறுதல் ஆகி வந்துள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ்குமார் (37) என்பவர் புழல் புதிய லட்சுமிபுரம் என்ற பகுதியில் மஹாலட்சுமி தங்க மாளிகை என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார். அந்த கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், சுவரில் துளையிட்டு 3.50 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்றது. கடந்த நவம்பர் 16ம் தேதி இந்த துணிகரச் சம்பவம
அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்:  கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்: கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
நெல்லை தீக்குளிப்பு நிகழ்வை சித்தரிக்கும் விதமாக முதல்வர், நெல்லை ஆட்சியர், காவல்துறை ஆணையர் ஆகியோரை கேலிச்சித்திரமாக வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை காவல்துறையினர் இன்று (நவம்பர் 5, 2017) கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் தனது மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் கடந்த அக்டோபர் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கொடுமைக்கு ஒரு குடும்பமே பரிதாபமாக பலியானது குறித்து சென்னை கோவூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா, தனது லைன்ஸ் மீடியா இணையதளத்தில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டு இருந்தார். அத்துடன் ஒரு கட்டுரையும் வெளியிட்டு இருந்தார்.