Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Neduvasal Hydrocarbon project

ஓராயிரம் வளர்மதிகள் வருவார்கள்!

ஓராயிரம் வளர்மதிகள் வருவார்கள்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களை நேசிக்கும் யார் ஒருவரும் ஒரு கட்டத்தில், ஆளும் வர்க்கத்தை எதிர்க்கத் துணிந்தவர்களாக மாறி விடுவதுதான் காலம் போட்டுக்கொடுத்திருக்கும் பாதை. தன் குடும்பம், குழந்தைகள் என்று வட்டத்திற்குள்ளேயே வாழ்வோருக்கு இது பொருந்தாது. மாறாக, மக்களைப் பற்றிய சிந்தனை யாரிடம் மேலோங்கி இருக்கிறதோ அவர்களே சாமானியர்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கி விடுகின்றனர். சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளத்தானூரைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி , பெரியார் பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்து வந்தார். 'இயற்கை பாதுகாப்புக்குழு' அமைப்பின் பொறுப்பாளராக இயங்கி வந்த வளர்மதி, கடந்த மாதம் ஜூலை 12ம் தேதி, சேலம் அரசு மகளிர் கல்லூரி அருகே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். அரசுக்கு எதிராக மாணவிகளை தூண்டியதாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர். உளவுப்பிரிவு காவல் துறையினர