Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: natural disaster

தஞ்சையில் வருகிறது ‘எய்ம்ஸ்’!

தஞ்சையில் வருகிறது ‘எய்ம்ஸ்’!

காஞ்சிபுரம், சிவகங்கை, சென்னை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, முக்கிய செய்திகள்
தமிழகத்தில், 'எய்ம்ஸ்' எனப்படும் அகில இந்திய மருத்துவக்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (All India Institute of Medical Sciences), தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நேரு பிரதமராக இருந்தபோது, தெற்கு ஆசியா அளவில் மிகச்சிறந்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தை இந்தியாவில் நிறுவ வேண்டும் என்றும், அதுவே தனது கனவு என்றும் கூறினார். பின்னர், 1956ம் ஆண்டில் புதுடில்லியில் எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி அந்தஸ்து பெற்ற நிறுவனம். இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகள் மட்டுமின்றி பல் மருத்துவம், செவிலியர் பயிற்சி, துணை மருத்துவப் படிப்புகளும் வழங்கப்படுகிறது. மருத்துவத்துறையில் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதும் எய்ம்ஸ் நிறுவனத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. இந்நிலையில், இந்தியாவில் மேலும் ஆறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவ ஆராய