Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: National Eligibility Entrance Examination

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

இந்தியா, கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் 'நீட்' தேர்வு எழுதப்பட வேண்டும். 2018-2019 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு, வரும் மே 6ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி (இன்று) வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இதற்கான அவகாசத்தை வரும் 12ம் தேதி (திங்கள் கிழமை) வரை நீட்டித்துள்ளது. அன்று மாலை 5.30 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். முன்பு நீட் தேர்வு எழுத ஆதார் அட்டை அவசியம் என்று அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பான ஒரு வழக்கில், நீட் உள்ளிட்ட எந்த ஒரு நுழைவுத்தேர்வுக்கும் ஆதார் அட்டை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து, ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்படும்போது ஆதார் விவரங்களை உள்ளீடு செய்யத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளத