Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Nasser

கேணி – சினிமா விமர்சனம்; ”தண்ணீர் அரசியலை பேசுகிறது”

கேணி – சினிமா விமர்சனம்; ”தண்ணீர் அரசியலை பேசுகிறது”

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தண்ணீர் மற்றும் தண்ணீரைச் சுற்றிலும் பின்னப்பட்டிருக்கும் அரசியல் சூழ்ச்சிகளைப் பற்றியும், சமகால அரசியல்வாதிகளின் உள்மனப்போக்கையும் தோலுரிக்கும் படமாக தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இன்று (பிப்ரவரி 23, 2018) வெளியாகி இருக்கிறது கேணி. கதைக்கரு: தமிழ்நாடு - கேரளா ஆகிய இரு மாநில எல்லைகளிலும் சரிபாதியாக அமைந்திருக்கும் ஒரு வற்றாத கிணறும், அந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் உரிமைக்காக போராடும் தமிழக எல்லையோர கிராம மக்களின் போராட்டங்களும்தான் படத்தின் ஒரு வரி கதை. நடிகர்கள்: ஜெயபிரதா, பார்த்திபன், நாசர், ரேவதி, அனு ஹாசன், ரேகா, பார்வதி நம்பியார், 'தலைவாசல்' விஜய், எம்.எஸ். பாஸ்கர், பசுபதி, சாம்ஸ், 'பிளாக்' பாண்டி மற்றும் பலர். தொழில்நுட்பக்குழு: ஒளிப்பதிவு: நவ்ஷத் செரீப்; இசை: ஜெயச்சந்திரன்; பின்னணி இசை: சாம் சி.எஸ்.; எடிட்டிங்: ராஜா முஹமது; தயாரிப்பு: ஃபிராகிரன்ட
திரை இசையில் வள்ளுவம்!: வரவு எட்டணா செலவு பத்தணா…: (தொடர்)

திரை இசையில் வள்ளுவம்!: வரவு எட்டணா செலவு பத்தணா…: (தொடர்)

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள்
தேனினும் இனிய குறள் அமுதத்தை, திரை இசையில் நயம்பட, எல்லோரையும் ஈர்க்கும்படி செய்வதன் நம் இளங்கம்பன் கவியரசர் கண்ணதாசன். 'குந்தித் தின்றால் குன்றும் கரையும்' என்பது முதுமொழி. அதுபோல், 'ஆடம்பரம், அழிவையே தரும்' என்பது சான்றோர் அனுபவ மொழி.     வெட்டி பந்தா குடும்பத்திற்கு ஆகாது என்பதை நகைச்சுவையுடன், தனக்கே உரிய மேதைமைத் தனத்துடன் 'பாமா விஜயம்' படத்தில் சொல்லி இருப்பார் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். 24.2.1967ல் வெளியான 'பாமா விஜயம்' படத்தின் ஒரு வரி கதை ரொம்பவே எளிமையானது.     ஊரே கொண்டாடும் திரைப்பட நடிகை பாமா, அவருடைய குடியிருப்பு அருகில் கூட்டுக்குடும்பமாக வாழும் தனது ரசிகர்களின் வீட்டிற்கு ஒரு நாள் விஜயம் செய்கிறாள். அவளுடைய வருகைக்காக, நடுத்தர வரக்கத்தைச் சேர்ந்த அந்த ரசிகர்கள், சக்திக்கு மீறி கடனை உடனை வாங்கி விலை உயர்ந்த சோஃபா, கட்டில் ம