Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: nanbenda

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சங்க இலக்கியங்களை, வெகுசன ரசிகர்களுக்கு ஏற்ப திரை இசைப் பாடல்களில் குழைத்துத் தருவது என்பது ஒரு நுட்பமான கலை. தமிழ்த் திரைப்படங்களில் 'இளங்கம்பன்' கண்ணதாசன் அதைச் சரிவர செய்தவர் என்பது என் அபிப்ராயம்.   மூத்த கவிஞர்கள் மருதகாசி, வாலி ஆகியோருக்குப் பிறகு வைரமுத்துவும் அவ்வப்போது இலக்கியங்களில் புரண்டு எழுவார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற தொகுப்புகளில் சங்க இலக்கியங்கள் வரிசை கட்டி நின்றாலும் குறுந்தொகை மீது திரைக்கவிஞர்களுக்கு எப்போதும் சற்று ஈர்ப்பு அதிகம். தவிர, கம்ப காவியத்தையும், பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் இருந்து திருக்குறளையும் திரை இசையில் வெகுவாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.   அண்மையில், யூடியூபில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. 'நண்பேன்டா (2015)' என்றொரு படம். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்திருந்தனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், 'ஊரெல்லாம் உன்னைக் கண்டு விய