Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: namakkal court

கோகுல்ராஜ் வழக்கை நாமக்கல் நீதிமன்றம் விசாரிக்க கூடாது! – ஹைகோர்ட்

கோகுல்ராஜ் வழக்கை நாமக்கல் நீதிமன்றம் விசாரிக்க கூடாது! – ஹைகோர்ட்

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கை, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து, உயர்நீதிமன்றம் மார்ச் 6, 2019ம் தேதி உத்தரவிட்டுள்ளது.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதியன்று திடீரென்று காணாமல் போனார். மறுநாள் மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ், தலை வேறு முண்டம் வேறாக கொல்லப்பட்டுக் கிடந்தார். திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ. படித்து வந்தபோது, தன்னுடன் ஒரே வகுப்பில் படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் கோகுல்ராஜ் நெருக்கமாகப் பழகி வந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதியை காதலிப்பதாக கருதிய கும்பல், அவரை சாதிய வன்மத்துடன் ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று அப்போது பல்வேற
கோகுல்ராஜின் நெருங்கிய தோழி சுவாதி நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்! கைது ஆணையால் அச்சம்!!

கோகுல்ராஜின் நெருங்கிய தோழி சுவாதி நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்! கைது ஆணையால் அச்சம்!!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து போக்குக் காட்டி வந்த கோகுல்ராஜின் தோழி சுவாதி, கைது ஆணை நடவடிக்கைக்கு பயந்து திடீரென்று நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதி, நாமக்கல் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில்தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். அவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதியுடன் நெருங்கிப் பழகி வந்தார். அதனால் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று சர்ச்சைகள் எழுந்தன.   இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த திருச்செங்கோடு காவல்துறையினர், கோகுல்ராஜை திட்டமிட்டு கொலை செய்ததாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவரா
சுவாதியை கைது செய்யுங்கள்! நாமக்கல் நீதிமன்றம் அதிரடி!!

சுவாதியை கைது செய்யுங்கள்! நாமக்கல் நீதிமன்றம் அதிரடி!!

குற்றம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த அவருடைய தோழி சுவாதிக்கு கைது ஆணை பிறப்பித்து நாமக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றம் இன்று (பிப்ரவரி 20, 2019) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கொலை செய்யப்பட்டார். 24.6.2015ம் தேதி மாலை, அவருடைய சடலம் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.   நாமக்கல்லை அடுத்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவர் கோகுல்ராஜ் உடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்தார். அப்போதுமுதல் இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியுடன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் நெருங்கிப் பழகியதை பிடிக்காத
கோகுல்ராஜ் கொலை வழக்கு: ‘சிறப்பான, தரமான சம்பவங்கள் இனிமேல்தான் வரப்போகுது!’ #Gokulraj #Day17

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ‘சிறப்பான, தரமான சம்பவங்கள் இனிமேல்தான் வரப்போகுது!’ #Gokulraj #Day17

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பில் அடுத்தடுத்து விஞ்ஞானப்பூர்வ தடயங்கள் பற்றி, சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க உள்ளனர். அதனால் யுவராஜ் தரப்பு மற்றும் அரசுத்தரப்பு வழக்கறிஞர்களிடையே நீதிமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என்பதால் இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 2015, ஜூன் 23ம் தேதி சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். ஜூன் 24ம் தேதி மாலை, திருச்செங்கோடு கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.   இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். குமார் என்கிற சிவக்குமார், சதீஸ் என்கிற சதீஸ்கும