Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: nala venpaa

முகமென்ன தாமரையா? கை விரல்களென்ன காந்தளா? குழம்பிய தும்பிகள்…மருண்டன விழிகள்!

முகமென்ன தாமரையா? கை விரல்களென்ன காந்தளா? குழம்பிய தும்பிகள்…மருண்டன விழிகள்!

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
நளன் - தமயந்தி இணையரின் காதல் வாழ்வு பற்றிய பாடல் தொகுப்புதான் நளவெண்பா. என்றாலும், தேனினும் இனிய உவமைகளும், உவமேயங்களும் கொட்டிக்கிடக்கும் சிறப்பு நளவெண்பாவுக்கு உண்டு. புகழேந்தி புலவரின் கற்பனையின் ஆழத்தை ஒவ்வொரு பாடலிலும் உணர்ந்து கொள்ள முடியும். நளவெண்பாவின் கலித்தொடர் காண்டத்தில் கானகத்தில் இயல்பாய் நிகழ்ந்த காட்சியொன்றை தன் கற்பனைத் திறத்தால் சாகாவரம் பெற்ற பாடலாக்கி இருக்கிறான் புகழேந்தி புலவன். அந்தப் பாடல்...   ''மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தை பங்கயம் என்றெண்ணிப் படிவண்டை - செங்கையால் காத்தாளக் கைம்மலரை காந்தளெனப் பாய்தலுமே வேர்த்தாளைக் காணென்றான் வேந்து'' (184)   என்கிறான் புகழேந்தி புலவன்.   கானகத்தில் அழகான, ஒளி வீசக்கூடிய முகம்கொண்ட பெண்ணொருவள், மலர்களைப் பறித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது