Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Music

ஒரு குடும்பம்; 6 பிள்ளைகள்; 5 பேருக்கு பார்வை இல்லை; ஒளி கொடுக்குமா அரசாங்கம்?

ஒரு குடும்பம்; 6 பிள்ளைகள்; 5 பேருக்கு பார்வை இல்லை; ஒளி கொடுக்குமா அரசாங்கம்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள், வேலூர்
சி-ற-ப்-பு-க்-க-ட்-டு-ரை ''ஒரு ஊர்ல ஓர் அப்பா அம்மா இருந்தாங்களாம். அவங்களுக்கு 6 பிள்ளைகளாம். அதுல, அஞ்சு பிள்ளைகளுக்கு கண் பார்வை தெரியாதாம்....'' எதிர்காலத்தில் இப்படி ஒரு கதை குழந்தைகளிடம் சொல்லப்படலாம். இது கதை அல்ல. நிஜம். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ராச்சமங்கலம் அருகே உள்ளது புறத்தார் வட்டம். இந்த ஊரைச் சேர்ந்த தண்டபாணி - சரஸ்வதி தம்பதிக்கு கோவிந்தம்மாள் (28), காஞ்சனா (27), ஏழுமலை (26), வெங்கடேசன் (24), பவித்ரா (22), இசை தீபா (19) ஆகிய பிள்ளைகள். இவர்களில் பவித்ரா தவிர, மற்ற ஐந்து பேருக்கும் காதுகளே கண்கள். எந்த பாவமும் செய்திராதபோதும் இயற்கை அந்த ஒரு குடும்பத்தை அப்படி சபித்திருக்கக் கூடாது. இங்குதான் கடவுளின் மீதான நம்பகத்தன்மையும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. கோவிந்தம்மாள், சரஸ்வதி தம்பதி இன்றைக்கு உயிருடன் இல்லை. பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்து ஆளாகிவிட்ட நிலையில், இத
‘திருட்டுப்பயலே-2’ – சினிமா விமர்சனம்!

‘திருட்டுப்பயலே-2’ – சினிமா விமர்சனம்!

சினிமா, முக்கிய செய்திகள்
'இந்த உலகத்தில் யாருமே நல்லவர்கள் இல்லை. எல்லோருக்கும் இரண்டு முகங்கள் இருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் அனைவருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். ஆகையால் எல்லோரையுமே சந்தேகிக்க வேண்டும்' என்ற செய்தியை உரத்துச் சொல்கிறது, 'திருட்டுப்பயலே-2' படம். நடிகர்கள்: பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, சுசி கணேசன், எம்எஸ் பாஸ்கர்; ஒளிப்பதிவு: செல்லதுரை; இசை: வித்யாசாகர்; தயாரிப்பு; ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்; கதை, திரைக்கதை, இயக்கம்: சுசி கணேசன். ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளமே கதியாகக் கிடக்கும் ஒரு திருமணம் ஆன பெண்ணிற்கு, அதனூடாக அறிமுகம் ஆகும் ஓர் ஆணின் மூலமாக விரும்பத்தகாத நெருக்கடிகள் ஏற்படுகிறது. அந்த நெருக்கடியில் இருந்து அந்தப் பெண்ணை கணவர் காப்பாற்றினாரா?, ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஆன அந்த ஆண் அந்தக் குடும்பத் தலைவிக்கு எதற்காக குடைச்சல் கொடுக்கிறார்?, குடும்பத்தலைவியின் நிலை என்ன ஆனது? என்பதை
தீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம்

சினிமா, சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, புதிய கதைக்களத்துடன் வந்திருக்கும் படம்தான் 'தீரன் அதிகாரம் ஒன்று'. தனியாக இருக்கும் வீடுகளைக் குறிவைத்து கொலை, கொள்ளையில் ஈடுபடும், பல ஆண்டுகளாக காவல்துறைக்கு தண்ணீ காட்டி வரும் ஒரு கும்பலை வேட்டையாடுவதுதான் படத்தின் ஒன் லைன். நடிகர்கள்: கார்த்தி, ரகுல் பிரீத் சிங், 'போஸ்' வெங்கட், அபிமன்யூ சிங், மனோபாலா, சத்யன் மற்றும் பலர். இசை - ஜிப்ரான். ஒளிப்பதிவு - சத்யன் சூரியன். தயாரிப்பு - ட்ரீம் வாரியர்ஸ். இயக்கம் - ஹெச்.வினோத். 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஹெச்.வினோத் இயக்கத்தில் இன்று (நவம்பர் 17, 2017) வெளியாகி இருக்கிறது 'தீரன் அதிகாரம் ஒன்று'. தொடர் குற்றத்தில் ஈடுபடும் ஒரு கும்பலை, ஒரு காவல்துறை அதிகாரி எப்படி பிடிக்கிறார்?, அதற்காக அவர் சந்திக்கும் இழப்புகள், சறுக்கல்கள், முயற்சிகள் என்னென்ன என்பதை ஆக்ஷன் திரில்லர் கலந்து பர
அறம் – சினிமா விமர்சனம்;  ‘துகிலுறியப்படும்  அதிகாரவர்க்கம்!’

அறம் – சினிமா விமர்சனம்; ‘துகிலுறியப்படும் அதிகாரவர்க்கம்!’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழில் எப்போதேனும் மிக அரிதான தருணங்களில் மட்டுமே குரலற்றவர்களின் குரலை, எந்த வித சமரசமுமின்றி திரைப்படமாக எடுக்கப்படுவதுண்டு. 'தண்ணீர் தண்ணீர்', 'ஜோக்கர்' போன்ற படங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த வகைமையிலான படம்தான், அறம். இந்தப் படத்திற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு வேறொன்றைச் சூட்டிவிட முடியாது. அண்மைக் காலங்களாக நயன்தாரா, நாயகி பிம்பத்தை தூக்கிப்பிடிக்கும் பாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருடைய ஒட்டுமொத்த சினிமா கேரியரில் இந்தப்படம் மறக்க முடியாததாக இருக்கும். நயன்தாராவைத் தவிர ஆட்சியர் பாத்திரத்திற்கு வேறு நாயகிகள் பொருந்துவார்களா என்பதும் கேள்விக்குறிதான். ஆட்சியருக்கான மிடுக்கு, கோபம், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான பரிவு என நவரசங்களையும் வெளிப்படுத்துகிறார். அவருடைய உடல்மொழி ரொம்பவே ரசிக்க வைக்கிறது. படம் முழுக்க அவருக்கு இரண்டே இரண்டு புடவைகளில்தான் வருக
‘அவள்’ – சினிமா விமர்சனம்

‘அவள்’ – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி மற்றும் பலரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இன்று (நவம்பர் 3, 2017) வெளியாகி இருக்கிறது 'அவள்'. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இயக்கம்: மிலிந்த் ராவ்; இசை: கிரிஷ்; ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா; எடிட்டிங்: லாரன்ஸ் கிஷோர்; தயாரிப்பு: வயாகாம்18 மோஷன் பிக்சர்ஸ், ஏடாகி எண்டர்டெயின்மென்ட். புதுமணத் தம்பதிகளான சித்தார்த்தும், ஆண்ட்ரியாவும் ஒரு தனி வீட்டில் தங்கி இருக்கின்றனர். அவர்களுடைய வீட்டிற்கு அருகில், இன்னொரு குடும்பம் புதிதாக குடி வருகிறது. அந்த வீட்டில் உள்ள ஜென்னி என்ற இளம்பெண்ணுக்கு திடீரென்று பேய் பிடித்து விடுகிறது. அந்தப் பேய், மெல்ல மெல்ல சித்தார்த் வீட்டுக்குள் நுழைகிறது. அதன்பிறகு நாயகனும், நாயகியும் என்ன ஆனார்கள்? அவர்கள் அந்த பேயை விரட்டினார்
‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

இந்தியா, சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று (அக். 18, 2017) 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது 'மெர்சல்'. நடிப்பு: விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா, 'யோகி' பாபு. இசை: ஏ.ஆர்.ரஹ்மான்; ஒளிப்பதிவு: விஷ்ணு; தயாரிப்பு; ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ்; இயக்கம்: அட்லீ. படத்தின் துவக்கத்தில் சென்னையில் அடையாறு, திருவல்லிக்கேணி, போட் கிளப் ஆகிய இடங்களில் மருத்துவத்துறை தொடர்பான ஆட்கள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் கடத்திக் கொல்லப்படுகின்றனர். இதற்கிடைய பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் விஜய், அங்கு ஒரு மேஜிக் நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த அரங்கிலும் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதைத் தொடர்ந்து சத்யராஜ், இந்த கொலைகளுக்குக் காரணம் விஜய்தான் என்ற சந்தேகத்தின்பேரில் அவரை கைது செய்கிறார். உண்மையில் இ
‘கருப்பன்’ – திரை விமர்சனம்!

‘கருப்பன்’ – திரை விமர்சனம்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆயுதபூஜை விடுமுறையைக் குறிவைத்து (செப். 29) வெளி வந்திருக்கும் படம் 'கருப்பன்'. நடிகர்கள்: விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா, பசுபதி, கிஷோர், சரத் லோகித்ஷ்வா, சிங்கம் புலி, ரேணுகா, காவேரி மற்றும் பலர். இயக்கம்: ஆர்.பன்னீர்செல்வம். இசை: டி.இமான். ஒளிப்பதிவு: சக்திவேல். தயாரிப்பு: ஏ.எம்.ரத்னம். 'ரேணிகுண்டா' படத்தின் மூலம் இளம் குற்றவாளிகளின் கதையைச் சொல்லி, கவனம் ஈர்த்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் சேதுபதியின் தோளில் சவாரி செய்துள்ள படம்தான் 'கருப்பன்'. கிராமத்து மாடுபிடி வீரனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள்தான் இந்தப் படத்தின் ஒரு வரி கதை. ஆனால், தனக்குக் கிடைக்க வேண்டிய பெண், வேறு ஒருவருக்கு கிடைத்து விட்ட ஆற்றாமையில், ஓர் இளைஞன் என்னவெல்லாம் செய்கிறான் என்ற கோணத்தில் திரைக்கதை நகர்கிறது. அப்படி தான் ஆசைப்பட்ட கதாநாயகியை பறிகொடுத்த வில்லன்தா
ரஜினி: ‘மேக்கிங் ஆஃப் 2.0’ ரிலீஸ்!

ரஜினி: ‘மேக்கிங் ஆஃப் 2.0’ ரிலீஸ்!

சினிமா, முக்கிய செய்திகள்
ரஜினி நடிப்பில், சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படமாக்கப்பட்ட விதம் குறித்த, 'மேக்கிங் ஆஃப் 2.0' வீடியோ இன்று (25/8/17) மாலை வெளியிடப்பட்டு உள்ளது. 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக '2.0' படம் தயாராகி வருகிறது. ஏற்கனவே ரஜினியை வைத்து முழு படப்பிடிப்பும் முடித்துவிட்ட நிலையில், தற்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஏமி ஜாக்ஸன் நாயகியாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இந்தப்படம் மூலம் தமிழில் களம் இறங்குகிறார். இசை, ஏ.ஆர்.ரஹ்மான். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். லைகா நிறுவனம் இந்தப்படத்தை 15 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. சுமார் 450 கோடி ரூபாயில் படம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. 3டி தொழில்நுட்பத்தில் படம் வெளியாகிறது. இந்தப்படம் தொடர்பான முக்கிய தகவலை வெளியிடுவதாக நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் சங்கர் தெரிவ