Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Municipal Commissioner

சபாஷ்  மாநகராட்சி! சுட்டிக்காட்டினோம்…செய்து முடித்தார்கள்…!!

சபாஷ் மாநகராட்சி! சுட்டிக்காட்டினோம்…செய்து முடித்தார்கள்…!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் நகரம் 1866ல் உருவாக்கப்பட்டது. 153 ஆண்டுகள் பழமையான இந்த நகரம், 1.6.1994ல் மாநகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது. சீர்மிகு நகரமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.   ஒரு காலத்தில், சேரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த நகரம், அதன்பிறகு மைசூர் சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. போரில் திப்பு சுல்தான் தோல்வி அடைந்த பிறகு, இந்த நகரம் கிழக்கிந்திய கம்பெனி வசம் கொண்டு வரப்பட்டது. அதனால், சேலம் மாநகரில் முக்கிய தெருக்கள், அங்காடிகள், வணிக பகுதிகள் பலவும் இயல்பாகவே ஆங்கிலேயர்களின் பெயர்களை வரித்துக்கொண்டன.   உதாரணத்திற்குச் சில...   ஹேரி அகஸ்டஸ் பிரட்ஸ் (HARRY AUGUSTUS BRETTS) என்ற ஆங்கிலேயர், 1853 முதல் 1862 வரை சேலம் ஜில்லாவின் ஆட்சியராக இருந்தார். அவருடைய நினைவாக சேல
‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாநகரத்திலேயே போதிய பொதுக்கழிப்பறை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் ரயில் தண்டவாளம், இருட்டு நேரத்தில் முள் புதரோரங்களில் 'அவசரத்துக்கு ஒதுங்கும்' அவல நிலை நீடிப்பதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) புகார் தெரிவித்துள்ளது. சேலம் நகராட்சி, 1994ம் ஆண்டில் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. தமிழகத்தின் ஐந்தாவது பெரிய மாநகரமாக இருந்து வருகிறது. ஆனாலும், அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமை பெறவில்லை. தனிநபர் வருவாய் உயர்விலும் மோசமான நிலையில் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், சேலம் மாநகராட்சி நிர்வாகம் தனிநபர் கழிப்பறை திட்டம் குறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 கோட்டங்களில் 52 கோட்டங்களில் திறந்தவெள