Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Mooppanar

பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்

பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர்
திட்டமிட்ட நேர மேலாண்மை இருந்தால், நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு பல்வேறு விதங்களிலும் ஆக்கப்பூர்வமாக பங்களிக்க முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், லட்சுமி சித்தார்த்தன். இவர், சேலம் சாரதா கல்லூரிச்சாலை எல்ஆர்என் காலனியில் உள்ள டிஎம்எஸ் கண் மருத்துவமனையின் இயக்குநர். இது மட்டுமல்ல. லேடீஸ் சர்க்கிள், சேலம் சிட்டிசன் ஃபோரம், இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ), சேலத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் 'இன்டேக்' உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்தும் செயல்பட்டு வருகிறார். லட்சுமி சித்தார்த்தனின் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே பாரம்பரியம் மிக்கது. இலங்கையின் கொழும்பு நகரம்தான் இவருடைய பூர்வீகம். ஈழ மண்ணில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் பத்திரிகையான 'வீரகேசரி' நாளேட்டின் நிறுவனரான நடேசன் அய்யாவின் பேத்திதான் இவர். இவருடைய கணவர் சித்தார்த்தன். சேலம் அறிந்த பிரபல கண் மருத்துவர். காங்கிரஸ் கட்சிய