Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Mettur

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 5000 லஞ்சம்; கொளத்தூர் இன்ஸ்பெக்டர் கைது!

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 5000 லஞ்சம்; கொளத்தூர் இன்ஸ்பெக்டர் கைது!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  மேட்டூர் அருகே, சேவல் சண்டையை வேடிக்கை பார்த்தவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று (ஆகஸ்ட் 10, 2018) கைது செய்தனர்.   சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சின்ன தண்டா பகுதியில் ஆகஸ்ட் 3ம் தேதியன்று, ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சேவல்கட்டு பந்தயம் நடந்தது. காவல்துறை அனுமதியின்றி இந்த பந்தயம் நடத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கொளத்தூர் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர்.   காவல்துறையினர் வருவதைப் பார்த்ததும் சேவல்கட்டு நடத்திய போட்டியாளர்கள், பார்வையாளர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களைக்கூட போட்டுவிட்டு தெறித்து ஓடினர். காவல்துறையினர் அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களை மீட்டு, கொளத்தூர் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். வாகனத்தைக் கேட்டு சின்ன தண்டாவைச் சேர்ந்த செந்தில் என
மேய்ச்சல் நிலமான மேட்டூர் உறுப்புக்கல்லூரி!;  சாதி பாசத்தில் எடப்பாடி பாரபட்சம்!!

மேய்ச்சல் நிலமான மேட்டூர் உறுப்புக்கல்லூரி!; சாதி பாசத்தில் எடப்பாடி பாரபட்சம்!!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சிறப்புக்கட்டுரை-   தமிழகத்தின் முதல் உறுப்புக்கல்லூரி என்ற அந்தஸ்து இருந்தாலும் ஆளும் தரப்பினரின் அலட்சியத்தால் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணிலேயே, மேட்டூர் அரசுக்கல்லூரி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.   சேலம், ஓமலூர் பிரதான சாலையில் கடந்த 1998ம் ஆண்டு பெரியார் பல்கலை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பெரியார் பல்கலையை ஈரோடு மாவட்டத்தில் தொடங்கும் திட்டமே இருந்தது. அப்போதைய திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மேற்கொண்ட முயற்சியால், சேலத்தில் இந்தப் பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்டது.   இந்தப் பல்கலையின் நேரடி நிர்வாகத்தின் கீழ், கடந்த 2006ம் ஆண்டு மேட்டூரில் உறுப்புக்கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டது. பல்கலைக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் உறுப்புக்கல்லூரியும் இதுதான். இதற்காக மேட்டூர் நான்கு ரோடு அருகே 15.75
வீரப்பன் வேட்டை பற்றி ஜெயலலிதா சொன்னது என்ன?; மனம் திறக்கும் கே.விஜய்குமார்

வீரப்பன் வேட்டை பற்றி ஜெயலலிதா சொன்னது என்ன?; மனம் திறக்கும் கே.விஜய்குமார்

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநில அரசுகளுக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிம்ம சொப்பனமாக இருந்து வந்த சந்தன கடத்தல் வீரப்பன், கடந்த 2004ம் ஆண்டு அக்.18ம் தேதி காவல்துறை அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் வேட்டை முடிந்து கடந்த 2017, 18ம் தேதியுடன் 13 ஆண்டுகள் கடந்து விட்டது. அவரை, 'பட்டுக்கூடு ஆபரேஷன்' (Operation Cocoon) மூலம் வேட்டையாடிய அதிரடிப்படைத் தலைவர் கே.விஜயகுமார், 'வீரப்பன் - சேசிங் தி ப்ரிகாண்ட்' (Veerappan - Chasing the Brigand) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் வீரப்பன் ஏன் வேட்டையாடப்பட்டார், கர்நாடகா சூப்பர் ஸ்டார் ராஜ் குமார், அமைச்சர் நாகப்பா ஆகியோரை வீரப்பன் கடத்தியது ஏன் என்பது குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார்.   காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட கே.விஜயகுமார், நடுவண் பாதுகா