Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: memes

எட்டுவழிச்சாலையும் எடப்பாடி பழனிசாமியும்…  மீம்ஸ்களால் தோரணம் கட்டும் இணையவாசிகள்!

எட்டுவழிச்சாலையும் எடப்பாடி பழனிசாமியும்… மீம்ஸ்களால் தோரணம் கட்டும் இணையவாசிகள்!

சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சென்னை - சேலம் இடையிலான எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆகியோரை கேலி, கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில்  வெளியிடப்பட்டுள்ள மீம்ஸ்கள் ரொம்பவே வைரல் ஆகி வருகின்றனர்.   சென்னை - சேலம் இடையே எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டம், 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைகிறது. இதற்காக 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில், 90 சதவீத நிலம், விளை நிலங்கள் ஆகும்.     இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதில் இருந்தே விவசாயிகள், பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, விவசாயிகள் தானாகவே முன்வ
சிங்கம் களம் இறங்கிடுச்சே!;  வைகோவை நொறுக்கும் ‘நெட்டிஸன்’கள்

சிங்கம் களம் இறங்கிடுச்சே!; வைகோவை நொறுக்கும் ‘நெட்டிஸன்’கள்

அரசியல், தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவதுதான் தனது நோக்கம் என்ற மதிமுக தலைவர் வைகோவை, சமூகவலைத்தளத்தில் கடுமையாக கிண்டல் செய்து 'மீம்'கள் பதிவிட்டுள்ளனர். பலர் திமுகவுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளனர். பேருந்து கட்டணம் உயர்வைக் கண்டித்து மதுரையில் நேற்று (பிப்ரவரி 13, 2018) பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக தலைவர் வைகோ, இரண்டு முக்கிய முழக்கங்களை முன்வைத்தார். ஒன்று, திராவிடம் இல்லாத தமிழ்நாடு என்று யார் நினைத்தாலும் அது முடியாது. மற்றொன்று, திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை தமிழகத்தின் முதலமைச்சர் ஆக்குவதுதான் என் நோக்கம் என்றும் கூறினார். சும்மாவே வைகோவை கேலி, கிண்டல் செய்யும் சமூகவலைத்தள பதிவர்களுக்கு இது போதாதா? இன்று நாள் முழுக்க அவரை கடுமையாக கிண்டல் செய்து எக்கச்சக்கமாக மீம்களை பதிவிட்டுள்ளனர். ஒரு காலத்தில் திமுகவின் மு
ரஜினிகாந்தின் புதிய அரசியல் கட்சி ஜனவரியில் அறிவிப்பு!: சொல்கிறார் சத்யநாராயண ராவ்

ரஜினிகாந்தின் புதிய அரசியல் கட்சி ஜனவரியில் அறிவிப்பு!: சொல்கிறார் சத்யநாராயண ராவ்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த், தான் தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சியின் பெயரை வரும் ஜனவரி மாதம் அறிவிப்பார் என்று அவருடைய அண்ணன் சத்யநாராயண ராவ் இன்று (நவம்பர் 29, 2017) தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ். அவர் சில தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தர்மபுரி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார்,'' என்றார். மேலும், ''ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று அவர் அரசியல் முடிவுகள் குறித்து எதுவும் அறிவிக்கப் போவதில்லை. அவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்,'' என்றும் கூறினார். முன்னதாக சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்தின் மனைவி லதா, அரசியல் கட்சி தொடங்குவது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவர் என்ன முடிவு
ஜிஎஸ்டி வரி குறைப்பு: ‘மீம்ஸ்’களால் வறுபடும் பாஜக!

ஜிஎஸ்டி வரி குறைப்பு: ‘மீம்ஸ்’களால் வறுபடும் பாஜக!

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜிஎஸ்டி வரி குறைப்பை (சரக்கு மற்றும் சேவை வரி) வரவேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்கு வழக்கம்போல் ட்விட்டரில் மீம் கிரியேட்டர்கள் அவர்களை நிமிரவே விடாமல் குனிய வைத்து குமுறியிருக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாட்டின் பன்மைத்துவத்தை சிதைக்கும் வகையில் ஒரே இந்தியா, ஒரே மொழி, ஒரே வரி சித்தாந்தங்களை முன்னெடுத்து வருகிறது. சங்க பரிவாரங்களின் அஜன்டாவை அமல்படுத்துவதில் குறியாக செயல்படுகிறது. அதற்கேற்ப, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பு முறையை நடுவண் அரசு அமல்படுத்தியது. 18 ஆண்டுகளுக்கு மேலாக விவாதத்தில் இருந்த இந்த வரி விதிப்பு முறை, பாஜக அரசு அமல்படுத்தியிருக்கிறது. ஜிஎஸ்டி முறையை காங்கிரஸ் வரவேற்றாலும், அதை அமல்படுத்தியதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், 28
அடடடா, நாட்டுல இந்த பக்தாஸ் தொல்ல தாங்க முடியலப்பா!

அடடடா, நாட்டுல இந்த பக்தாஸ் தொல்ல தாங்க முடியலப்பா!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாஸன் தெரிவித்த கருத்துக்கு எதிராக மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் ட்விட்டரில் கருத்துக்கூறிய பாஜக ஹெச்.ராஜாவை கிண்டலடித்து இணையவாசிகள் 'மீம்'கள் பதிவிட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாஸன், வார இதழ் ஒன்றில் எழுதி வரும் கட்டுரையில், ''இந்து தீவிரவாதம் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்,'' என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜக தரப்பில் கடுமையான எதிர்வினைகள் கிளம்பி இருக்கும் நிலையில், அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் இதுபற்றி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''விஸ்வரூபம் படப்பிரச்னையின்போது, முஸ்லிம் அமைப்புகள் 20 வருடத்திற்கு கமலின் பயம் போகாது என்றது சரிதான் போல. இந்துக்கள் மீது தாக்குதல் வெட்கம்,'' என்று நேற்று (நவம்பர் 2, 2017) கருத்து வெளியிட்டு இருந்தார். மேலு
மெர்சல் கருத்து: தமிழிசையை இப்படி செய்வது தகுமா?

மெர்சல் கருத்து: தமிழிசையை இப்படி செய்வது தகுமா?

அரசியல், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பற்றிய வசனத்திற்கு கண்டனம் தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசையை, சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து 'மீம்ஸ்'கள் மூலமாக 'கிழி கிழி' என்று கிழித்து தொங்கவிட்டுள்ளனர். விஜய் நடிப்பில் உருவான 'மெர்சல்' படம், கடந்த 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஏற்கனவே 'ராஜாராணி', 'தெறி' மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லீயின் இந்தப்படமும் வெற்றி பெற்றுள்ளது. முன்பு இயக்கிய இரு படங்களிலும் பழைய தமிழ் சினிமாக்களின் கதை, காட்சிகளின் சாயல்கள் இருப்பதுபோல் 'மெர்சல்' படத்திலும் 'அபூர்வ சகோதரர்கள்', 'மூன்று முகம்', 'சிவாஜி', 'ரமணா' ஆகிய படங்களின் சாயல்களும் இருக்கவே செய்கின்றன. படத்தில் இடம்பெற்றுள்ள புறா காட்சிகள், ராஜநாகம் காட்சிகள் குறித்த சந்தேகங்களால் இப்படத்துக்கு தணிக்கை வாரிய சான்றிதழ், விலங்குகள் நலவாரியத்திடம்