Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Medical Education

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது! எம்பிபிஎஸ்., மாணவர் சேர்க்கை விரைவில் ஆரம்பம்!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது! எம்பிபிஎஸ்., மாணவர் சேர்க்கை விரைவில் ஆரம்பம்!

இந்தியா, தகவல், முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு, கடந்த செப். 12ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இத்தேர்வை, இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் சுமார் 1.10 லட்சம் பேர் எழுதினர். இதன் தற்காலிக விடைகள் (ஆன்சர் கீ), அக். 15ம் தேதி வெளியிடப்பட்டது. இயற்பியல் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.   வழக்கமாக நீட் தேர்வு நடத்தப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள் முடிவுகள் வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு, நாக்பூரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தைச் சேர்ந்த 25 மாணவர்கள், நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. &nb
இளநிலை துணை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

இளநிலை துணை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட இளநிலை துணை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட நேரடி மருத்துவப் படிப்புகள் மட்டுமின்றி அத்துறையைச் சார்ந்த ஏராளமான தொழில்சார் துணை மருத்துவப் படிப்புகளும் இருக்கின்றன. சான்றாக, பிஎஸ்சி செவிலியர், ரேடியோதெரபிஸ்ட், இமேஜிங் டெக்னீஷியன் உள்ளிட்ட படிப்புகளைச் சொல்லலாம். எந்த விதமான நுழைவுத்தேர்வுகளுமின்றி, முற்றிலும் பிளஸ்2 மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மட்டுமே இதுபோன்ற துணை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில், இளநிலை பிரிவில் துணை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் நடப்பு 2021 - 202
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

இந்தியா, கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் 'நீட்' தேர்வு எழுதப்பட வேண்டும். 2018-2019 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு, வரும் மே 6ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி (இன்று) வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இதற்கான அவகாசத்தை வரும் 12ம் தேதி (திங்கள் கிழமை) வரை நீட்டித்துள்ளது. அன்று மாலை 5.30 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். முன்பு நீட் தேர்வு எழுத ஆதார் அட்டை அவசியம் என்று அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பான ஒரு வழக்கில், நீட் உள்ளிட்ட எந்த ஒரு நுழைவுத்தேர்வுக்கும் ஆதார் அட்டை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து, ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்படும்போது ஆதார் விவரங்களை உள்ளீடு செய்யத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளத