Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: media

மக்களே போல்வர் கயவர்…! ஊடகங்களும் அத்தகையவர்களே!!

மக்களே போல்வர் கயவர்…! ஊடகங்களும் அத்தகையவர்களே!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் பத்து நாள்களில் வர உள்ள நிலையில், செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், தேர்தல் கள ஆய்வு நிறுவனங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி நிறுவனம், பெடரல் இணைய ஊடகம் மற்றும் ஏபிடி நிறுவனமும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. மக்களவைத் தேர்தல்-2024ல் தமிழகத்தில், திமுக 38.35 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், அதிமுக 17.26 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கிறது, புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு. நாம் தமிழர் கட்சி 7.26 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பிடிக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், தொண்டர்கள் மற்றும் கட்டமைப்பு ரீதியாக வலிமையாக உள்ள அதிமுகவைக் கா
யாருக்கான ஊடகங்கள்?: சிரியா யுத்தமும் ஸ்ரீதேவி இறுதிச்சடங்கும்!

யாருக்கான ஊடகங்கள்?: சிரியா யுத்தமும் ஸ்ரீதேவி இறுதிச்சடங்கும்!

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஒட்டுமொத்த இந்திய காட்சி ஊடகங்களும் ஸ்ரீதேவி துக்கத்தில் இருந்து இன்று (பிப்ரவரி 28, 2018) முதல் மெதுவாக விடுபட்டு விடும் என நம்பலாம். பத்திரிகைகளை விடவும் இந்தக் காட்சி ஊடகங்களின் செயல்பாடுகள் ஏன் எப்போதும் வர்க்க நலன் சார்ந்தே இருக்கின்றன என்பது தான் எனக்குப் புரியவில்லை. அரசாங்கங்களை இயக்குவது ஊடகமா? அல்லது ஊடகத்திற்குத் தீனி போடுவது அரசாங்கமா? என்பது புரிந்து விடக்கூடாத அளவில் இரண்டும் திரைமறைவில் கைகோத்து செயல்படுகின்றன. ஒகி புயலில் சிக்கிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பாத இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான், துபாயில் இருந்து ஸ்ரீதேவியின் சடலத்தைக் கொண்டு வர அம்பானிக்குச் சொந்தமான தனி விமானத்தை ஏற்பாடு செய்து தருகிறார். இந்த அரசியலைப் பற்றியெல்லாம் எந்த ஓர் அச்சு அல்லது மின்னணு ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. மாறாக, ஸ்ரீதேவியின்
ஊடகங்களை பேச விடுங்கய்யா….!: உச்சநீதிமன்றம் உத்தரவு

ஊடகங்களை பேச விடுங்கய்யா….!: உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியா, முக்கிய செய்திகள்
ஊழல் முறைகேடு பற்றிய செய்தியில் சிறு சிறு தவறுகள் அல்லது அதை வெளியிடுவதில் அதீத ஆர்வம் இருப்பதை எல்லாம் அவதூறாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 9, 2018) கருத்து தெரிவித்துள்ளது. அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மீதான தாக்குதல் என்பது இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் வியாபித்து இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்குழு ஆய்வின்படி, 1992 முதல் கடந்த 2017ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 1252 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. பத்திரிகையாளனின் பேனா முள் தலை சாய்ந்திருக்கும் வரை ஆட்சியாளர்களோ, அதிகார வர்க்கமோ கண்டுகொள்வதில்லை. அதே பேனா முள் அவர்களை நோக்கி நீளும் ஆயுதமாக மாறும்போதுதான் ஊடகத்தின் மீதோ அல்லது அதை எழுதியவர் மீதோ தாக்குதல் தொடுக்க தொடங்கி விடுகின்றனர். ஆளும் வர்க்கம், அவதூறு வழக்கு என்ற பெயரில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டு முடக்கும் வேலைக
ஒரு குடும்பம்; 6 பிள்ளைகள்; 5 பேருக்கு பார்வை இல்லை; ஒளி கொடுக்குமா அரசாங்கம்?

ஒரு குடும்பம்; 6 பிள்ளைகள்; 5 பேருக்கு பார்வை இல்லை; ஒளி கொடுக்குமா அரசாங்கம்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள், வேலூர்
சி-ற-ப்-பு-க்-க-ட்-டு-ரை ''ஒரு ஊர்ல ஓர் அப்பா அம்மா இருந்தாங்களாம். அவங்களுக்கு 6 பிள்ளைகளாம். அதுல, அஞ்சு பிள்ளைகளுக்கு கண் பார்வை தெரியாதாம்....'' எதிர்காலத்தில் இப்படி ஒரு கதை குழந்தைகளிடம் சொல்லப்படலாம். இது கதை அல்ல. நிஜம். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ராச்சமங்கலம் அருகே உள்ளது புறத்தார் வட்டம். இந்த ஊரைச் சேர்ந்த தண்டபாணி - சரஸ்வதி தம்பதிக்கு கோவிந்தம்மாள் (28), காஞ்சனா (27), ஏழுமலை (26), வெங்கடேசன் (24), பவித்ரா (22), இசை தீபா (19) ஆகிய பிள்ளைகள். இவர்களில் பவித்ரா தவிர, மற்ற ஐந்து பேருக்கும் காதுகளே கண்கள். எந்த பாவமும் செய்திராதபோதும் இயற்கை அந்த ஒரு குடும்பத்தை அப்படி சபித்திருக்கக் கூடாது. இங்குதான் கடவுளின் மீதான நம்பகத்தன்மையும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. கோவிந்தம்மாள், சரஸ்வதி தம்பதி இன்றைக்கு உயிருடன் இல்லை. பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்து ஆளாகிவிட்ட நிலையில், இத
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவும் பிரஷ்ஷர் குக்கரின் கடைசி விசிலும்!

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவும் பிரஷ்ஷர் குக்கரின் கடைசி விசிலும்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சாவுக்கு ஒரு ஓட்டு; நோவுக்கு ஒரு ஓட்டு என்று அரசியல் செய்வதில் அதிமுககாரர்கள் கில்லாடிகள் என்பதற்கு, அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக இன்று (டிசம்பர் 20, 2017), வெளியான வீடியோ இன்னுமொரு சான்று. ஜெயலலிதா இறந்து ஓராண்டு ஆகியும் அவருடைய மரணம் குறித்த சர்ச்சைகள் இறக்கை கட்டிப் பறந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசித்துப் பார்த்தால், அம்மா இட்லி சாப்பிட்டார் என்பது முதல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரதாப் சி ரெட்டியின் அண்மைய அறிக்கை முதல் எல்லாவற்றிலும் ஒரு முரண்பாடு இருப்பதை அறிய முடியும். ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே சீரியஸ் நிலையில்தான் இருந்தார் என்று பிரதாப் சி ரெட்டி சொன்னதற்கு, சட்டம்&ஒழுங்கு கெட்டுவிடக்கூடாது என்பதுதான் காரணம் என நியாயம் கற்பிக்கிறார். நாளை (டிசம்பர் 21, 2017) ஆர்கே நகர்
வதந்தி பரப்பும் ஊடகங்கள்; நெட்டிஸன்கள் பொளேர்!

வதந்தி பரப்பும் ஊடகங்கள்; நெட்டிஸன்கள் பொளேர்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வெறுமனே பரபரப்புக்காக செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் பின்னணியில் அபரிமிதமான லாப வேட்கையும், மனித உணர்வுகளை அலட்சியப்படுத்துவதில் அசட்டுத்தனமான துணிச்சலுமே மலிந்திருக்கிறது என்பதைத்தான் ஊடகங்களின் அண்மைக்கால போக்குகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஊடகம் (மீடியா) என்ற சொல்லே பொதுப்பெயர்தான். இதனுள் அச்சு, காட்சி ஊடகங்கள்¢ இரண்டும் அடங்கும். பொதுவெளியை விடுவோம்; ஊடகத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னும் 'மீடியா' என்றால் காட்சி ஊடகம் என்றே புரிந்து வைத்திருக்கிறார்கள். கோச்சிங் அளிப்பவரை 'கோச்சர்' என்பதுபோல. இப்படிச் சொன்ன பிறகு, இந்தக் கட்டுரை எழுதியதற்காக என் சமகால நண்பர்கள் என்னையும் பகடி செய்யக்கூடும். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்ற புரிதலோடுதான் எழுதுகிறேன். அச்சு ஊடகங்கள் மட்டுமே கோலோச்சிய காலங்களில் அவற்றினூடாக வதந்திகள் பரவியதில்லையா எனக் கேட்கலாம்.
இந்தியா: கேள்விக்குறியாகும் பத்திரிகையாளர் பாதுகாப்பு!

இந்தியா: கேள்விக்குறியாகும் பத்திரிகையாளர் பாதுகாப்பு!

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கர்நாடகாவில் பத்திரிகை ஆசிரியர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம், இந்தியாவில் ஊடகங்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கர்நாடகாவில், கடந்த ஆண்டு எழுத்தாளர் கல்புருகி கொல்லப்பட்டார். நேற்று (செப். 5) லங்கேஷ் பத்திரிகை ஆசிரியர் கவுரி லங்கேஷ். இருவருமே இடதுசாரி சித்தாந்தங்களை பேசக்கூடியவர்கள்; எழுதக்கூடியவர்கள். தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர்கள். கவுரி லங்கேஷின் படுகொலைக்கு காரணமென காவி கும்பல்களின் மீதான சந்தேகம் இயல்பாகவே வலுத்துள்ளது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குறித்து சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் (International Federation for Journalists) சில தகவல்களை வெளியிட்டுள்ளது. 140 நாடுகளில் 6 லட்சம் பத்திரிகையாளர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு, இந்த சம்மேளனம் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 122