Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Marxist Communist

திரிபுரா: இடதுசாரிகளுக்கு தோல்வியும் அல்ல; பாஜகவுக்கு வெற்றியும் அல்ல!

திரிபுரா: இடதுசாரிகளுக்கு தோல்வியும் அல்ல; பாஜகவுக்கு வெற்றியும் அல்ல!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
திரிபுரா மாநிலத்தில் கூட்டணி சகிதமாக அமோக வெற்றி பெற்று இடதுசாரிகளின் கோட்டையைத் அனாயசமாக தகர்த்தெறிந்துள்ளது பாஜக. கால் நூற்றாண்டு காலமாக 'லால் சலாம்' முழக்கம் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்த அந்த மாநிலத்தில், தேர்தல் முடிவு வெளியான நேற்றிலிருந்து 'பாரத் மாதா கி ஜே'வும், 'வந்தே மாதரம்' முழக்கமும் எதிரொலிக்கின்றன. திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிந்து, முடிவுகள் நேற்று (மார்ச் 3, 2018) வெளியாகின. மூன்று மாநில தேர்தல் முடிவுகளிலும் ஒரு நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. அது, நீண்ட காலம் ஆட்சியில் இருப்போரை மாற்ற வேண்டும் என்று மக்கள் யோசித்திருப்பது தெரியவருகிறது. குறிப்பாக, திரிபுரா. அது, காலங்காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை. தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றிபெற்று 20 ஆண்டுகளாக முதல்வர் பதவியை அலங்கரித்து வந்த மாணிக் சர்க்கார்
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 187 ஆணவ படுகொலைகள்!

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 187 ஆணவ படுகொலைகள்!

சென்னை, தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 187 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். உடுமலை சங்கர் ஆணவ படுகொலை வழக்கில் இன்று (டிசம்பர் 12, 2017) திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் சங்கரின் மனைவியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியது: ஆணவப் படுகொலைக்கு எதிரான இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். சாதியைக் கவுரவமாகக் கருதி, சங்கரை பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 187 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. ஆனால்