Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Marina Revolution

காவிரி விவகாரம்: கொலை வாளினை எடடா!

காவிரி விவகாரம்: கொலை வாளினை எடடா!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்து மற்றுமொரு மெரீனா புரட்சிக்கு தமிழக இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். துவக்க நிலையிலேயே கைது நடவடிக்கை மூலம் கடுமை காட்டும் தமிழக அரசை முற்றாக வீட்டுக்கு அனுப்பும் புதிய அத்தியாயத்தை இந்தப் போராட்டம் முன்னெடுக்கும் எனத்தெரிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கான முழு காலக்கெடுவையும் தின்று தீர்த்த நடுவண் பாஜக அரசு, தமிழக நலனுக்கு எதிராக மிகத்தந்திரமான நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது. சட்ட ரீதியாக தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரையும் கிடைக்க விடாதபடி, பாஜகவும் காங்கிரஸ் கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. மக்கள் நலன் பாராத காட்டுமிராண்டித்தன போக்கிற்கு வாக்கு அரசியல் மட்டுமே காரணம். கர்நாடகாவில் விரைவில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மையப்படுத்தியே பாஜக, இத்தகைய மாற்றாந்தாய் மனப்போக்கி
நேற்று  செங்கொடி;  இன்று அனிதா!

நேற்று செங்கொடி; இன்று அனிதா!

அரசியல், இந்தியா, கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''பொறுத்தது போதும்...புறப்படு தமிழா...'' மருத்துவர் கனவு நனவாகாத சோகத்தில் உயிர் தற்கொடையாக்கிய இளம்தளிர் அனிதாவின் மரணம், தமிழ்நாட்டின் சோகம் மட்டுமன்று; அது, இந்தியாவின் துயரம். மானுடத்தின் மீது அரச பயங்கரவாதம், தர்க்க ரீதியில் நிகழ்த்தும் அதிபயங்கர வன்முறைக்கு தன்னையே காவு கொடுத்திருக்கிறாள் அனிதா. அனிதாவின் முடிவை வேறெந்த ஒரு மாணவரும் எடுத்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசுகள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லை; நாம் மீண்டும் அரசின் கதவுகளைத்தான் தட்ட வேண்டியதிருக்கிறது. தற்கொலை என்பது ஏற்கப்படுவதற்கில்லை. அதில் நமக்கும் உடன்பாடுதான். ''அனிதாவின் தற்கொலை, பிற மாணவர்களுக்கு முன்னுதாரணம் அல்ல. கனவு நிறைவேறாவிட்டால் தற்கொலைதான் முடிவா? 'விமான ஓட்டி' கனவு நிறைவேறாதவர்தான் கலாம்,'' என்று நடிகர் விவேக் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகனை இழந்த தந்தைக்குரிய ப